"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
2/1/17

கனடா நாட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பயணிகள் விமானத்தை இயக்க முயன்ற விமானி ஒருவர் கடைசி நிமிடத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவில் உள்ள கல்கேரி நகரில் இருந்து மெக்ஸிகோ நாட்டிற்கு நேற்று முன் தினம் 100 பயணிகளுடன்
விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

இந்த விமானத்தில் ஸ்லோவோக்கியா நாட்டை சேர்ந்த Miroslav Gronych(37) என்பவர் விமானியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஓடுத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானத்தை
நோக்கி விமானி நடந்து சென்றுள்ளார். அப்போது, வழியில் விமான நிலைய
ஊழியர்களிடம் பேசிக்கொண்டு
சென்றுள்ளார்.விமானியின் நடையிலும், பேச்சிலும் தடுமாற்றம் இருப்பதை உணர்ந்த ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.

தகவலை பெற்ற அதிகாரிகள்
உடனடியாக விமானத்தில் ஏறி
விமானியை கீழே அழைத்து
வந்துள்ளனர். பின்னர், அவரது உடலை சோதனை செய்தபோது அளவுக்கு அதிகமான மது கலந்திருப்பது உறுதி
செய்யப்பட்டது. விமானியை கைது செயத பொலிசார் அவரை தனி அறையில் அடைத்து வைத்தனர்.

மேலும், மற்றொரு விமானி மூலம் அந்த பயணிகள் விமானம் மெக்ஸிகோ நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.