"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/12/16


உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட்ட பின்னர் புதிதாக மிகக் குறைவான அளவே 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. இதனால் நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனையடுத்து மக்கள் அனைவரும் ரொக்க பண வரவு செலவை தவிர்த்து 'டிஜிட்டல்' பணபரிமாற்றத்தை மேற்கொள்ள மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இதனையடுத்து சிறு மற்றும் குறு வணிகர்கள் டிஜிட்டல் பண பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஸ்வைப் எந்திரங்களை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை பிரபலப்படுத்துக் வகையில் ஸ்வைப் எந்திரங்களை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் வங்கிகள் மற்றும் 'டிஜிட்டல்' பணபரிமாற்றம் மூலமாக 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் மேற்கொள்ளும் சிறு வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுக்கு வரியில் 2 சதவீதம் அதிரடியாக குறைக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகையை பயன்படுத்தும் சிறு வணிகர்கள் இனி லாபத்தில் 6 சதவீதம் வரி செலுத்தினால் போதும் என்றும் ஆனால் ரொக்க வரவு செலவு மேற்கொள்ளும் சிறுவணிகர்களுக்கு பழையபடி 8 சதவீத வரியே தொடரும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

விகளத்தூர் எக்ஸ்பிரஸ் கருத்து!
வரிகுறைப்பை வரவேற்றாலும் இந்தியாவில் ரொக்கமில்லா பனப்பறிவர்த்தனை சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.