"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/12/16

முதல் முறையாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோவில் கட்டவும் சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கப்பட்டது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோவில் கட்டவும் சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கப்படுகிறது. முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் இந்துக்கள் மைனாரிட்டிகளாக உள்ளனர். எனவே அங்கு இந்து கோவில்கள் அதிக அளவில் இல்லை. சில கோவில்கள் பயங்கரவாதிகளாலும் உள்ளூர் இயக்கங்களாலும் இடித்தும் சேதப் படுத்தப்பட்டும் வருகிறது.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் 800 இந்துக்கள் வாழ்கின்றனர். கோவில் இல்லாத காரணமாக அவர்கள் பண்டிகை நாட்களை கொண்டாட முடியாத நிலை காணப்படுகிறது. சாத்தார் பகுதியில் மட்டும் ஒரே ஒரு பெரிய கிருஷ்ணர் கோவில் மட்டுமே உள்ளது.

சமுதாய கூடம் மற்றும் சுடுகாடு போன்ற தனிப்பட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. இறந்தவர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்ய ராவல்பிண்டி அல்லது அவர்கள் வாழும் நகரங்களுக்குதான் கொண்டு செல்ல வேண்டும்.

எனவே புதிதாக கோவில் கட்டவும் சுடுகாடு மற்றும் சமுதாய கூட்டம் கட்ட நிலம் ஒதுக்கும்படி பாகிஸ்தான் அரசிடம் இந்துக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அக்கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைநகர் வளர்ச்சி குழுமம் பொதுமக்களின் அடிப்படை வசதியை மேம்படுத்தும் வகையில் இந்துக்களின் கோரிக்கையை ஏற்று கோவில் கட்டவும் சுடுகாடு அமைக்கவும் நிலம் ஒதுக்கியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.