"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/12/16

ஐக்கிய அரபு அமீரக துணைப் பிரதமராக இருப்பவர் ஷேக் ஷேப் பின் செயது அல் நியான். இவர் பாகிஸ்தான் நாட்டின் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்திற்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினருடன் பாதுகாப்பு வாகனத்தில் குஹாக் பகுதியில் பறவை வேட்டைக்காக சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கி ஏந்திய 10 பேர் கும்பல் மோட்டார் சைக்கிளில் வந்தனர். 

திடீர் என அவர்கள் துப்பாக்கியால் துணை பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் சென்ற வாகனங்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில் அவர்கள் சென்ற 2 வாகனங்கள் குண்டுகள் பாய்ந்து சேதமடைந்தன. அதிஷ்டவசமாக துணைப் பிரதமர் ஷேக் ஷேப் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த தாக்குதலை பன்ச்கூர் பகுதி துணை போலீஸ் கமிஷனர் உறுதிப்படுத்தியுள்ளார்.  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தடை செய்யப்பட்ட பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
இந்த நிகழ்வு இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் துணைப்பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஆனால் இந்த செய்தி வளைகுடா செய்தித்தாள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது வியப்பாக உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.