"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

இந்தியாவில் ஒரு ஸ்மார்ட்போனுக்காக பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான ஃப்ளிப்கார்ட்டின் டெலிவரி பாய் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அலகாபாத் விஜய்நகர் பகுதியிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

22 வயதான வருண் குமார் என்ற நபர் ஃப்ளிப்கார்ட் தளத்தில் 12,000 ரூபாய் மதிப்புள்ள ஒரு ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில், வருண் குமாரின் தந்தை பணத்தை தர மறுக்க அவர் போனை சொந்தமாக்க கொடூர முடிவு எடுத்துள்ளார்.

28 வயதான டெலிவரி பாய் Nanjundaswamy, போனை வருண் குமாரிடம் வழங்கி பணத்தை பெற்றுக்கொள்ள அழைத்துள்ளார். வருண் அவரை விஜய்நகரில் உள்ள அலகாபாத் வங்கி பார்க்கிங்கில் காத்திருக்கும் படி கூறியுள்ளார்.

பின்னர், அங்கு வந்த வருண் Nanjundaswamy அடித்து கொன்றுவிட்டு, அவரிடமிருந்த போன்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிசார் குற்றவாளி வருண் குமாரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம், டெலிவரி பணியில் ஈடுபட்டு வரும் நபர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.