Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதா இறந்தது சோ ராமசாமிக்கு தெரியாதாம்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்ப...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தி அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது நண்பர் சோ ராமசாமிக்கு தெரியாது என தகவல் வந்துள்ளது.
 
மூத்த பத்திரிகையாளரும், துக்ளக் ஆசிரியருமான சோ ராமசாமி இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 82. கடந்த பல மாதங்களாக சோ உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் சோ ராமசாமி. இறுதியில் இன்று அதிகாலை 4.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாரடைப்பு காரணமாக சோ ராமசாமி உயிரழந்தார் என்பதை அவரது மருத்துவர் விஜய சங்கர் உறுதிப்படுத்தினார்.
 
இந்நிலையில் சோ ராமசாமியின் நெருங்கிய நண்பர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்த செய்தி சோ ராமசாமிக்கு தெரியாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top