"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/12/16

டிசம்பர் 6 அன்று !! பாபர் மசூதி இடிப்பு தினம் !!! வழக்கமாக இஸ்லாமியர்கள் கறுப்பு தினமாக கடைபிடித்து போராட்டங்களை முன்னெடுப்பது வழக்கம்.
 
ஆனால் நடந்ததோ வேறு !! நம்முடைய முதலமைச்சர் காலமானதை அடுத்து ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். திடீரென காவலர்கள் குவிக்கப்பட்டதால், துக்கத்திற்கு இடையில் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் சில சிரமங்கள் ஏற்பட்டது. 

இதையடுத்து ஒன்றுகூடிய இஸ்லாமிய இளைஞர்கள் பலர், காவலர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்ட பொருட்களை வீதி வீதியாக எடுத்து சென்று விநியோகித்தனர்.
 
நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டதால் ,திருவல்லிக்கேனி உள்ளிட்ட இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் , பிரத்யேகமாக வீடுகளில் உணவு தயாரித்து, போலீசார்களுக்கு விநியோகித்தது மட்டுமல்லாமல், உணவு தேவைக்கு தொலைபேசி எண்ணையும் கொடுத்திருக்கிறார்கள் !!!

கடந்த ஆண்டு இதே டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்திலும் , இதே போல பல இஸ்லாமிய இளைஞர்கள் உதவியது மறப்பதற்கில்லை!!! நம்மில் பலர் அவர்களை பிரித்து பார்த்தாலும், நமக்கு ஏதாவது ஏற்பட்டால் முதலில் அவர்களே வந்து நிற்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது !!!

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.