"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/12/16

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அஞ்சலிக்காக நேற்று ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்த திரையுலகினர் முதற்கொண்டு அத்தனை பிரபலங்களும் வந்தனர். கட்சி தலைவியை பறி கொடுத்து நிற்கும் அந்த சூழலில், கருணாஸ் சிரித்துக்கொண்டே செல்பி எடுப்பதும், பேசி சிரிப்பதுமாய் இருந்தது மக்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலை தளத்தில் கருணாஸை கண்டித்து பல பதிவுகள். அதில் ஒன்று…
“ஒரு ஓட்டை கைனட்டிக் கோண்டாவில் வாய்ப்பு தேடி அலைந்த கருணாஸ், இயக்குனர் பாலா புனியத்தால் லொடுக்கு பாண்டியானார். இங்கும் அவர் சார்ந்திருந்த சாதி உதவியது.
மக்கள் பணியிலோ, கடசியில் சேவையோ ஏதும் செய்யாமல்…திடீர் என்று நடிகர் கருணாஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கட்சியில் இணைந்து உடனடியாக எம்.எல்.ஏவும் ஆகிவிட்டார். இங்கும் அவரின் சாதி உதவியது.
நேற்று ஆரம்பம் முதல் இறுதி வரை தன் தலைவியின் உடல் அருகிலேயே கருணாஸ் நின்று… மெரீனாவில் அடக்கம் செய்யும் வரையும் அருகில் இருந்தார்.
இதற்கு என்ன பதில் கருணாஸ் சொல்லி இருக்கிறார் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

“நேற்று ராஜாஜி அரங்கிலும், எம்ஜிஆர் சமாதி செல்லும் வழியிலும் நிறைய பேர் செல்பி எடுக்க ஆசைப்பட்டு வந்தனர் .அவர்களை எல்லாம் திட்டி அனுப்பினேன்.

ஆனால் ஊரிலிருந்து வந்திருப்பதாக சொல்லி ரொம்ப கேட்டதால்… போட்டோ எடுத்துக்கொண்டேன். இது போன்ற இடங்களில் போட்டோ எடுப்பது கேவலம் என்று கூட அந்த பையனுக்கு தெரியலையே… என்ன செய்வது?
அம்மாகிட்ட வச்சிருந்த விசுவாசம் அவுங்களுக்கு தெரியும்.”

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.