"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/12/16

மக்கள் வசிக்கும் கட்டிடங்கள் மற்றும் வில்லாக்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படும் போது அந்த கட்டிடங்களின் உரிமையாளர்கள் மட்டுமே சட்டப்படி தண்டிக்கப்பட்டு வந்தனர். தீ விபத்து போன்ற சம்பவங்கள் குடியிருக்கும் வாடகைதாரர்களின் அலட்சியத்தினாலேயே பெரும்பாலும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதால் 2017 ஆம் ஆண்டு முதல் வாடகைதாரர்களை பொறுப்பேற்கச் செய்வதுடன் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அபராதமும் விதிக்க ஏதுவான சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமீரகத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு நவீன (ஸ்மார்ட்) திட்டத்தின் மூலம் கட்டிடங்களில் பொருத்தப்பட்டுள்ள லிப்டுகள் (Lifts), கட்டுப்பாட்டு கருவிகள் (Control Panel), தீயணைப்பு பம்புகள் (Fire Pumps), தண்ணீர் தொட்டிகள் (Water Tanks), வீட்டுத்தேவைக்கான கேஸ் இணைப்புக்கள் (Building Gas System) போன்றவை 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாலும் மக்கள் அலட்சியமாக தூக்கி எரியும் சிகரெட் துண்டுகள் (Cigarette Buds), பார்பீக் (Barbecue Grills) அடுப்புப்பின் தீப்பொறிகள், ஷீஷாக்கள் (Shisha) எனப்படும் அரேபிய புகைப்பிடிப்பான்கள், அவசரகால வழிகளை அடைத்து வைப்பது, பொருட்களை கண்டவாறு சேமித்து வைப்பது போன்ற தீ பரவும், கட்டிடங்களை சேதப்படுத்தும் அலட்சிய குற்றங்களில் ஈடுபடுவது யார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அமீரக தீயணைப்பு துறையினர்.

அதேபோல் கட்டிடங்களில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள தரமற்ற தீயணைப்பு கருவிகள் அனைத்தும் துபை மாநகராட்சியால் சோதனை செய்யப்பட்டு புதிய தரமான கருவிகளை பொருத்தவும் உத்தரவிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புதிய சட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.