"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
23/12/16

இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்ட் டிரம்ப் “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால் அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன். ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம்” என தனது தேர்தல் பிரசாரங்களை முன்வைத்திருந்தார்.

மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளையும் முன்வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கு தனி பதிவேடு அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவிதிப்பு போன்ற பல்வேறு யோசனைகள் மூலம் விமர்சனத்திற்கும் ஆளாகியிருந்தார். இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஜேர்மனியில் மார்க்கெட் பகுதியில் ‘டிரக்’ தாக்குதல் நடத்தப்பட்டது இதில் 12 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு தாக்குதலுக்கும் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதோடு. இவ்வாறான சூழ்சிலைகள் உருவாகுவதற்கு முஸ்லிம் வாழ் தீவரவாதிகளே காரணம். ஆகவே அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பா துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

என்றாலும் மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இச்சம்பவங்களால் இஸ்லாமியர்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும் துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்றார்.

ஆகவே எனது முடிவுக்கு மாற்று கருத்து இல்லை என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.