"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
25/12/16

நிக்கலையே... நிக்கலையே... என்று ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர் புலம்புவது பேட்டரி பேக்கப்பிற்காகதான்... இதை சரி செய்ய நிபுணர்கள் சில ஐடியாக்கள் கொடுத்துள்ளனர். என்ன ஐடியா தெரியுங்களா?

ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் சில வழிமுறைகளை பின்பற்றினால் பேட்டரி பேக்கப் நேரத்தை சற்றே கூடுதலாக பெற முடியும். அப்படியாக பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பாருங்கள்..

எந்நேரமும் அனைத்து செயலிகளையும் ஓப்பன் செய்து வைத்தால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். இதனால் பயன்படுத்தாத செயலிகளை அவ்வப்போது மூடி விடவேண்டும்.

ஸ்மார்ட்போன் திரையின் பிரைட்னஸ் அளவினை அதிகமாக வைத்திருந்தால், பேட்டரியின் முழு சக்தியும் சீக்கிரம் காலியாகி உங்களை கவுத்துவிடும். இதனால் வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னஸ் அளவு வைப்பது மற்றும் ஆட்டோ பிரைட்னஸ் மோடு ஆகியவற்றை செட் செய்து கொள்ளலாம்.

வைபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஸ் போன்ற சேவைகளை பயன்படுத்தாத சமயத்தில் ஆப் செய்து வைக்க வேண்டும். இதனால் பேட்டரி பேக்கப் நேரம் வழக்கத்தை விட அதிகமாக கிடைக்கும்.

நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கான சின்க் ஆப்ஷனை ஆப் செய்து வைக்கும் போதும் பேட்டரி பேக்கப் நேரம் அதிகரிக்கும்.

உயர் ரக கேம்களை விளையாடாமல் இருந்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் கிடைக்கும்.

முக்கியமாக, லொகேஷன் (location)off செய்ய வேண்டும் மற்றும் பயன்படுத்திய செயலியை நீக்க வேண்டும் அதாவது(recent clear) செய்ய வேண்டும்

சரி இதெல்லாம் செய்வீர்களா? செய்தால் பேட்டரி பேக்கப் அதிக நேரம் இருக்கும்.

விகளத்தூர் எக்ஸ்பிரஸ் கருத்து!
இவை அனைத்தும் செய்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்,
இல்லையெனில், போனை அணைப்பதை(switch off) விட வேறு வழி இல்லை😢😢

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.