"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/12/16

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா நிர்ரஹீம்
இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா ? இல்லை பாதுகாக்கிறதா ?
உடலை காட்டுவதற்கு சுகந்திரம் இருக்கிறதாம் ! ஆனால் மறைப்பதற்கு இல்லையாம் ! என்னே உலகம்….!
வெயிலுக்காக அணிந்தால் அது #பெண்_சுகந்திரமாம். “!
ஆனால் உடலை மறைப்பதற்காக அணிந்தால் அது #பெண்_அடிமைத்தனமாம் !
கேட்டால் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது என்பார்கள்.
எல்லா வகையிலும் இஸ்லாம் பெண்களை பாதுகாக்கவே செய்கிறது.
`
பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?“அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழ….

`
மார்க்கம் பெண்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..?
`
மார்க்கம் ஒருவர் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
.
இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கு எல்லா உரிமைகளும், மதிப்பும் மரியாதையும் வழங்கப்படுகிறது.
1 .கல்வி உரிமை
2. சொத்துரிமை
3. சாட்சி சொல்லும் உரிமை
4. கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை
5. விவாகரத்து கேட்கும் உரிமை
6. அரசியல் உரிமை
7. சமூக உரிமை
8. ஆன்மிக உரிமை
9 .ஆண்களுக்கு அவர்களின் மனைவியின் மேல் இருக்கும் உரிமை போல் பெண்களுக்கும் அவர்கள் கணவனின் மேல் உரிமை இருக்கிறது. (ஆண்களும், பெண்களும் சமம்.) ஆணுக்கு பெண் அடிமை இல்லை இருவருக்கும் சம உரிமை உண்டு என்பதை தெளிவாகவே விளக்குகிறது.
10. பெண் சிசு கொளையை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
11. பெண்கள் அல்லாஹ்வை வணங்குவதற்காக பள்ளிபள்ளிவாசலுக்கு செல்ல விரும்பினால் அவர்களை அனுமதியுங்கள், அவர்கள் இரவில் பள்ளிவாசல்களுக்கு செல்ல விரும்பினாலும் அவர்களை தடுக்காதீர்கள்.
12.மணக்கொடை (மஹர்).
இன்னும் இஸ்லாம் பெண்களை கன்னியப்படுத்துகிறது.
`
பெண் குழந்தைகள் பிறந்தால் அவர் முகம் வாடுவதைக்கூட இஸ்லாம் கண்டிக்கிறது.
இஸ்லாத்தில் பெண்களுக்கு 1400 வருடங்களுக்கு முன்பே கொடுக்கப்பட்ட உரிமைகளில் பலவற்றை இன்று வரை நம் அரசாங்கத்தால் கொடுக்க முடியவில்லை?…ஆனால் பெண்கள் மிருகங்களைப்போல நடத்தப்பட்ட அக்காலத்தில் பெண்களை பாதுகாக்க இஸ்லாம் மட்டுமே வழி வகை செய்தது. சட்டங்கள் பிறப்பித்தது மட்டும் அல்லாமல் அதை இஸ்லாம் நடைமுறைப்படுத்தவும் செய்கிறது.
சிந்தியுங்கள் செயல்படுங்கள்
திருக்குர்ஆனில் அறிவியல்
மறுமை நாளை நோக்கி…
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.