காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: உருவானது வர்டா புயல்…. தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடா புயல் உருவானது. இதன் மூலம் தமிழகத்தின் வறட்சி நீங்கும் என்று எதிர்பார்’கப்பட்டது. ஆனால் நாடா ஏமாற்றி ...
கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடா புயல் உருவானது. இதன் மூலம் தமிழகத்தின் வறட்சி நீங்கும் என்று எதிர்பார்’கப்பட்டது. ஆனால் நாடா ஏமாற்றி விட்டது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறியது. இந்த புயலுக்கு வர்தா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. விசாகப்பட்டிணத்திற்கு தென்கிழக்கில் 1090 கி.மீ தொலைவிலும் மசூலிப்பட்டிணத்திற்கு கிழக்கே தென்கிழக்கில் 1070 கிமீ தொலைவிலும் அது நிலை கொண்டுள்ளது.

12 மணி நேரத்தில் வடக்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக அடுத்தத 24 மணி நேரத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் சில இடங்களில் பலத்த மழை பெய்ய கூடும், அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் கொந்தளிப்பு காணப்படும்.

இதன்மூலம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை அறிவித்து உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top