"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/12/16

சென்னை: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட இருக்கிறார்.

அதிமுக பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார்.

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு, ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சசிகலாவை பொதுச் செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து திருமண மண்டபத்திற்கு பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.