Mohammed Farook Mohammed Farook Author
Title: முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்)
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பிரிவு - 1  பொதுவான சட்டங்கள் இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை, இஸ்லாத்தில் பெண்கள் நிலை இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்க...
பிரிவு - 1  பொதுவான சட்டங்கள்
இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை, இஸ்லாத்தில் பெண்கள் நிலை
இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்
பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

பிரிவு - 2  பெண்களின் உடல் அலங்காரம்
பெண்ணின் தலைமுடி அலங்காரம், பெண்கள் முடிக்கு சாயமடித்தல்

பிரிவு - 3 மாதவிடாய் பிரசவம் பற்றியது
மாதவிடாய், மாதவிடாய்க்கான வயது, மாதவிடாய் பெண்ணின் சட்டங்கள்
மஞ்சள் கலங்கல் நிற இரத்தம், மாதவிடாய் முடிவை அறிவது, உதிரப்போக்கு
உதிரப்போக்குள்ள பெண் கடைபிடிக்க வேண்டியவை, பிரசவ இரத்தம்
பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள், மாதவிடாய் நிற்க, மருந்து உண்ணுதல், கருக்கலைப்பு

பிரிவு - 4  பெண்களின் ஆடைபற்றிய சட்டங்கள்
1. இஸ்லாமியப் பெண்களின் ஆடை, 2. பர்தாவின் பலன்கள்

பிரிவு - 5  பெண்கள் சம்பந்தப்பட்ட தொழுகைச்சட்டங்கள்
முழுமையாக பர்தா அணிதல், வெளியில் செல்லும்போது நறுமணம் பூசுதல்
ஆபரணங்கள் அணிந்து வெளியே செல்லுதல், பெருநாள் தொழுகைக்கு, பெண்கள் செல்லுதல்

பிரிவு - 6  பெண்கள் சம்பந்தப்பட்ட ஜனாஸாவின் சட்டங்கள்
ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்லுதல், பெண்கள் கப்ரு ஜியாரத் செய்தல்
ஒப்பாரிவைத்தல்

பிரிவு - 7  நோன்பு பற்றிய பெண்களுக்கான சட்டங்கள்
பெண்கள் நோன்பை விடுவதற்கான காரணங்கள், யார் மீது நோன்பு கடமை
கர்பமும் பாலூட்டலும், எச்சரிக்கை

பிரிவு - 8 பெண்களுக்கான ஹஜ், உம்ரா பற்றிய பாடம்
பெண்களுக்கான ஹஜ் சம்பந்தப்பட்ட சட்டங்கள், பெண்களின் இஹ்ராம்
பெண்கள் தல்பிய்யா சொல்லுதல், பெண்கள் தவாஃப் செய்தல், ஹஜ்ஜின் போது மாதவிடாய்ப் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை, எச்சரிக்கை

பிரிவு - 9  கணவன், மனைவி சம்பந்தப்பட்ட சட்டங்கள்
திருமணத்தில் பெண்ணின் கருத்தை ஏற்றல், பெண்ணின் திருமணத்திற்கு அதிகாரியின் அவசியம், திருமணத்தை விளம்பரப்படுத்துதல், கணவன், மனைவியை வெறுத்தல், மனைவி, கணவனை வெறுத்தல், திருமண, ஒப்பந்தம் நடந்தபின், இத்தாவின் வகைகள், இத்தாவிலிருக்கும் பெண்கள் மீது விலக்கப்பட்டவை, இத்தா காலத்தில் திருமண ஒப்பந்தம், நறுமணம் உபயோகித்தல், உடல் அலங்காரம், ஆடையில் அலங்காரம், ஆபரணங்கள் அணிதல்.

பிரிவு - 10  பெண்ணின் கண்ணியத்தையும், கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள்
கற்பைக் காத்தல், அன்னிய ஆணுடன் தனிமையில் இருத்தல், கைலாகு செய்தல்.

முடிவுரை
 முன்னுரை :
அகிலங்களைப்படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அவன்தான் ஒவ்வொன்றுக்கும் ஒரு நிர்ணயத்தை ஏற்படுத்தி அதற்கு வழிகாட்டினான். மேலும் அவன் தான் இந்திரியத்திலிருந்து ஆண், பெண் ஜோடிகளையும் படைத்தான். வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை என்று நான் சான்று பகர்கிறேன். ஆரம்பத்திலும் இறுதியிலும் அவனுக்கே புகழனைத்தும். முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள் என்றும் நான் சான்று பகர்கிறேன். அவர்கள் (மிஃராஜ் இரவு அன்று) வானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். 

அல்லாஹ்வின் மகத்தான அத்தாட் சிகளை அங்கு கண்டார்கள்; அவர்கள் மீதும், சிறப்பு மற்றும் புகழுக்குரிய அவர்களின் குடும்பத்தார் மீதும், அவர்களுடைய தோழர்களின் மீதும் அல்லாஹ் சாந்தியும், சமாதானத்தையும் பொழிவானாக!

ஒரு முஸ்லிம் பெண்ணிற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் மிக முக்கியமான இடம் இருக்கிறது. பெண்கள் தொடர் பான சட்டங்கள் இஸ்லாத்தில் அதிகமாக உள்ளன. பெண்களுக்கென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல அறிவுரை களைக் கூறியுள்ளார்கள். 'அரஃபா' பெரு வெளியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆற்றிய உரையில் பெண்களுக்கென சில உபதேசங்களைச் செய்துள்ளார்கள். இவை அனைத்தும் எல்லாக் காலங்களிலும் பெண்களுக்கு அளிக்க வேண்டிய முக்கியத்துவத்தைத் தெரிவிக் கின்றன.

தற்காலத்தில் பெண்களின் கற்பு சூறையாடப்படு கிறது; அவர்களின் கண்ணியம் பறிக்கப்படுகிறது அவர் களின் அந்தஸ்துகள் மறுக்கப்படுகின்றன. இப்படிப் பட்ட காலச்சூழலில் இஸ்லாம் கூறும் பெண்களுக்குரிய உரிமைகள் கடமைகள் ஆகியவற்றை அவர்களுக்கு அவ்வப்போது நினைவூட்டுவது அவசியமாகிறது. எனவே அவர்களுக்கு ஏற்படவிருக்கும் ஆபத்துக்களைச் சுட்டிக் காட்டி, வெற்றிக்கான வழியை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

பெண்கள் சம்பந்தப்பட்ட சில சட்டங்களை உள்ளடக்கியுள்ள இந்நூல் நாம் மேற் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுகிற வகையில் அமையும் என நான் நம்புகிறேன். சமுதாயத்திற்கு இது ஒரு சிறிய பங்களிப்பு என்றாலும் இது ஒரு குறைவான முயற்சி. அல்லாஹ் இதைப் பயனுள்ளதாக ஆக்கியருள்வானாக! 

இவ்வகையில் நான் மேற்கொண்டுள்ள முயற்சி ஆரம்பக்கட்ட மாகும். இதைவிடவும் விரிவான சிறப்பான முயற்சிகள் தொடர நான் ஆசைப்படுகிறேன்.
நான் இந்நூலில் பின்வரும் விஷயங்களை விளக்கியுள்ளேன்.
முதல் பிரிவு : பொதுவான சட்டங்கள்
இரண்டாம் பிரிவு : பெண்களின் உடல் அலங்காரம் பற்றியது
மூன்றாவது பிரிவு : மாதவிடாய், உதிரப்போக்கு, பிரசவம் சம்பந்தப்பட்டது
நான்காவது பிரிவு : ஆடைகள் மற்றும் பர்தாசம்பந்தப்பட்டது.
ஐந்தாவது பிரிவு : பெண்களின் தொழுகை முறைகளை பற்றியது
ஆறாவது பிரிவு : பெண்களுக்குரிய ஜனாஸாவின் சட்டங்கள் குறித்து.
ஏழாவது பிரிவு : நோன்பில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்கள் பற்றியது.
எட்டாவது பிரிவு : ஹஜ் உம்ராவில் பெண்களுக்குரிய சட்டங்கள் பற்றியது.
ஒன்பதாவது பிரிவு : கணவன் மனைவி சம்பந்தமானது.
பத்தாவது பிரிவு : பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் சட்டங்கள் பற்றியது.

ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான், தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி.

வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத். 

நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் பல்வேறு மார்க்க விசயங்களை அதிகமாக பதிவு செய்து வருகிறோம், அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் என்ற (தொடர்) இன்ஷா அல்லாஹ் தொடர்ச்சியாக இனி காணலாம்....

இன்ஷா அல்லாஹ்! தொடரும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7   

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top