Mohamed Farook Mohamed Farook Author
Title: பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை...
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான ...
பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய
சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும்
இஸ்லாம் கற்றுத்
தந்திருக்கின்றது. இதில்
பிறந்தநாள் கொண்டாட்டத்தை
இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை.
கொண்டாடுமாறு மக்களுக்கும்
கூறவில்லை. ஏன் நபி (ஸல்)
அவர்களால் உருவாக்கப்பட்ட
நபித்தோழர்களிடையே
இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம்
இருக்கவில்லை. பிறந்தநாள் கொண்டாடுவது என்பது அறிவுக்கு
பொருந்ததாது.

இஸ்லாத்தில் இதுபோல
இறப்புக்கும் பிறப்புக்கும்
'வருடாந்திர நினைவு நாள்'
துக்கமாக இருப்பதோ அல்லது
கொண்டாடுவதோ கிடையாது.
இறந்த அன்றும் அடுத்த இரண்டு நாள் மட்டும் துக்கம்
அனுஷ்டிக்கலாம். குழந்தை
பிறந்த 7ம் நாள் ஆடு அறுத்து
'அகீகா' விருந்து போட்டு (மூன்றில் ஒரு பங்கை ஏழைக்கு கொடுத்து ) கொண்டாடலாம்..! ஆனால், 'அடுத்த வருடம் மீண்டும் ஆடு அறுக்கனுமா' என்றால்... கிடையாது..! ஏன்..?

இவ்விஷயத்தில் இஸ்லாம்
தெளிவாகவே இருக்கிறது.
மனிதனுக்கு பிறந்தநாள்
ஆயுளுக்கு ஒருமுறைதான் வரும் என்று..! அதேபோல... மனிதனுக்கு ஆயுளுக்கு இறந்த நாள் என்பதும் ஒரே ஒரு முறைதான்..! மாற்றுக் கலாசாரத்தை பின்பற்றி மறுமையில் மாட்டிக் கொள்ளாதீர்கள். மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை.

ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய
அருளாலே நடந்து கொண்டிருக்கின்றது.

எனவே இதில் மனிதன் தன்னை
பெருமைப்படுத்திக்கொள்வதில்
என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?
மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக்
கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது? இது பிற்காலத்தில்
கிறிஸ்தவர்களிடமிருந்து
காப்பியடிக்கப்பட்ட
கொண்டாட்டமாகும்.
கிரிஸ்தவர்களின் கெட்ட
கலாச்சாரத்தை நாம்
பின்பற்றக்கூடாது என்று நபி
(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
3456 ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺳَﻌِﻴﺪُ ﺑْﻦُ ﺃَﺑِﻲ ﻣَﺮْﻳَﻢَ ﺣَﺪَّﺛَﻨَﺎ ﺃَﺑُﻮ ﻏَﺴَّﺎﻥَ
ﻗَﺎﻝَ ﺣَﺪَّﺛَﻨِﻲ ﺯَﻳْﺪُ ﺑْﻦُ ﺃَﺳْﻠَﻢَ ﻋَﻦْ ﻋَﻄَﺎﺀِ ﺑْﻦِ ﻳَﺴَﺎﺭٍ ﻋَﻦْ
ﺃَﺑِﻲ ﺳَﻌِﻴﺪٍ ﺭَﺿِﻲَ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻨْﻪُ ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠَّﻪُ ﻋَﻠَﻴْﻪِ
ﻭَﺳَﻠَّﻢَ ﻗَﺎﻝَ ﻟَﺘَﺘَّﺒِﻌُﻦَّ ﺳَﻨَﻦَ ﻣَﻦْ ﻗَﺒْﻠَﻜُﻢْ ﺷِﺒْﺮًﺍ ﺑِﺸِﺒْﺮٍ
ﻭَﺫِﺭَﺍﻋًﺎ ﺑِﺬِﺭَﺍﻉٍ ﺣَﺘَّﻰ ﻟَﻮْ ﺳَﻠَﻜُﻮﺍ ﺟُﺤْﺮَ ﺿَﺐٍّ ﻟَﺴَﻠَﻜْﺘُﻤُﻮﻩُ
ﻗُﻠْﻨَﺎ ﻳَﺎ ﺭَﺳُﻮﻝَ ﺍﻟﻠَّﻪِ ﺍﻟْﻴَﻬُﻮﺩَ ﻭَﺍﻟﻨَّﺼَﺎﺭَﻯ ﻗَﺎﻝَ ﻓَﻤَﻦْ ﺭﻭﺍﻩ
ﺍﻟﺒﺨﺎﺭﻱ
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :
''உங்களுக்கு முன்னிருந்த
(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின்
வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள்
குறிப்பிடுகிறீர்கள்?'' என்று
நாங்கள் கேட்டோம். அதற்கு நபி
(ஸல்) அவர்கள், ''வேறெவரை?''
என்று பதிலலித்தார்கள். புகாரி
(3456)

(வலையுகம் ஹைதர் அலி)

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top