.

.
2/12/16

உடலுறவு என்பது உயிரினங்கள் மத்தியில் மிக இயல்பான ஒன்று. ஆனால் அதை கூடாதது, தவறானது என்ற போக்கை காட்டி வளர்ப்பதால் தான் இளம் வயதினர் அதை நாடி சென்று தவறானவற்றை கற்றுக் கொள்கின்றனர். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல நாடுகளில் காண முடிகிறது. சில மேற்கத்திய நாடுகள் அளவுக்கு மீறிய சுதந்திரம் அளித்து, இளம் வயதினரின் வாழ்க்கையை அழித்து விடுகிறார்கள். பதின் வயது முடியும் வரை குழந்தைகளை சமநிலை மனப்பக்குவத்தில் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இனி, உலகில் கடைப்பிடிக்கப்படும் சில விசித்திரமான உடலுறவு சார்ந்த சட்டங்கள் பற்றி இங்கு காணலாம்…

சிங்கப்பூர்!

ஜன்னல் அருகே வெளியே தெரியும் படி நிர்வாணமாக நிற்பது குற்றம். இது சிங்கப்பூரில். இந்த தவறை செய்தால் நீங்கள் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை நேரிடும்.

போலாந்து!

போலாந்தில் விலங்குகளுடன் உடலுறவில் ஈடுபடுவது குற்றம். இது போன்ற செயலில் மூன்று முறைக்கு மேல் நீங்கள் சிக்கினால், மரண தண்டனை வழங்கப்படும்.

பெரு!

பெருவியன் சிறையில், கைதிகள் சாப்பிடும் உணவில் அதிக காரம் சேர்க்க கூடாது. காரம் அவர்கள் மத்தியில் பாலுணர்வு அதிகரிக்க தூண்டும் என்பதால் இந்த தடை நிலவுகிறது. இங்கு சிறையில் கைதிகள் உடலுறவில் ஈடுபடுவது தவறு.

இந்தோனேசியா!

இந்தோனேசியாவில் சுய இன்பம் காண்பது கண்டுப்பிடிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும். குற்ற உணர்வு ஏற்படும் பட்சத்தில் அந்நபருக்கு எட்டு மாதங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும்.

லண்டன்!

லண்டனில் இருசக்கர வாகனத்தில் உடலுறவில் ஈடுபடுவது தவறு. இதை சட்டங்கள் எதிர்க்கின்றன. கொலம்பியா! கொலம்பியாவில் முதலிரவின் போது புதுமண தம்பதிகள் பிரிந்து இருக்க கூடாது. அன்றைய இரவு மணப்பெண்ணின் தாய் முன்பு அவர்கள் இணைந்திருக்க வேண்டும்.
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.