"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/12/16

சவுதி அரேபியாவில் ஆண்கள், பெண்களை அதிகப்படியான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்திய நபருக்கு ஒரு வருட சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் “பாதுகாவலுக்கு” எதிராக சமூக ஊடகங்களில் கருத்துக்களை பகிர்ந்ததாகவும், கிழக்கு பகுதி நகரான டமாமில் எதிர்ப்பு பதாகைகளை வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
குடும்பத்தினரால் தவறாக நடத்தப்படும் தனது உறவுக்கார பெண்களுக்கு உதவ, ஆண்கள் “பாதுகாவலுக்கு” எதிரான பிரசாரத்தை தொடங்கியதாக அந்த மனிதர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில், ஆண்களால் பாதுகாக்கப்படும் வழக்கத்தை நிறுத்த வேண்டும் என ஆயிரக்கணக்கான சவுதி மக்கள் விண்ணப்பம் ஒன்றில் கையெழுத்திட்டிருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.