"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/12/16

அமெரிக்காவில் முஸ்லிம் கல்லூரி மாணவி ஒருவர் 3 நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Yasmin Seweid (18) என்பவர் நியூயார்க்கில் உள்ள ஒரு முஸ்லீம் கல்லூரியில் படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2ம் தேதியில் இருந்து அவர் கல்லூரிக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் அவரது தந்தை போலிஸ்லிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் காணாமல் போன யாஸ்மினை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் யாஸ்மின் அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 1ம் திகதி யாஸ்மின் பேஷன் ஷோவில் கலந்து கொண்டுவிட்டு நியூயார்க்கில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது 3 நபர்கள் மது குடித்துவிட்டு யாஸ்மினிடம் தகராறு செய்துள்ளனர். இனவெறி வார்த்தைகளை பயன்படுத்திய அவர்கள் பின்னர் யாஸ்மினை தாக்க தொடங்கியுள்ளனர். நீ தீவிரவாதி தானே.. உடனே எங்கள் நாட்டை விட்டு உடனே வெளியேறு என்று தாக்க தொடங்கியதாக யாஸ்மின் தெரிவித்துள்ளார்.

அவர்கள் அடிக்கடி ட்ரம்ப்பின் பெயரை பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த நபர்கள் தன்னுடைய கைப்பையை பறித்து உள்ளே என்ன இருக்கிறது என பார்க்க முயன்றதாகவும் தலையில் அணிந்திருந்த முக்காடை அவிழ்க்க முயன்றதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் இது தொடர்பாக யாஸ்மின் எழுதியுள்ள பதிவு வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.