"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/12/16

ஓமனில் பணிநிமித்தம் சென்றுள்ள பன்னாட்டு தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் பல்வேறு காரணங்களால் தங்களுக்கு வேலை வழங்கிய முதலாளிகளை விட்டும் வெளியேறி பிற இடங்களில் வேலைவாய்ப்புக்களை சட்டவிரோதமாக தேடிக்கொள்கின்றனர், இதில் நியாயமான காரணம் இருப்பதைப்போலவே அநியாயமான காரணங்களும் உண்டு. இவர்களில் பலரை ஒமன் தலைநகர் மஸ்கட் மாநகரின் முத்ராஹ் பிரதேச ஹம்ரியா பகுதியில் அதிகாலை 5 மணிமுதல் அன்றாட தற்காலிக (அத்த கூலி) வேலைவாய்ப்புக்களுக்காக வரிசையில் காத்திருப்பதை காணலாம்.

இப்படி தங்களின் கம்பெனிகளை, முதலாளிகளை விட்டும் வெளியேறியோர் சுமார் 60,000 பேர் எனவும் இவர்களில் பெரும்பான்மையினர் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் ஓமானிய அரசின் வேலைவாய்ப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போது பல வளைகுடா நாடுகளிலிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளின் காரணமாக வேலைவாய்ப்பிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதால் கடந்த சுமார் 4 மாதங்களாக சட்டவிரோதமாக வெளியில் வேலைபார்ப்போருக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து போதிய வருமானமின்றி திண்டாடி வருவதால் பலரும் நாட்டை விட்டு வெளியேற முயல்கின்றனர் ஆனால் முறையாக வெளியேற வேண்டுமானால் பலவித அபராதங்களையும் செலுத்தினால் மட்டுமே முடியும் இல்லையேல் பொதுமன்னிப்பு ஒன்றே வழி.

சட்டவிரோத தொழிலாளி ஒருவர் ஓமனை விட்டு வெளியேற வேண்டுமானால் விமான நிலையத்தில் விசா கட்டணமாக 20 ரியால், சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒவ்வொரு மாதத்திற்கும் 19 ரியால்கள் என வேலைவாய்ப்புத்துறை அமைச்சகத்திற்கும், ஓடிப்போனதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் அதிலிருந்து விடுபட 400 ரியால்களையும் அபராதமாக செலுத்த வேண்டும் என்றாலும் தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய தொழிலாளர்களால் இந்த அபராதங்கள் செலுத்த முடியாதவை என்பதால் அவர்கள் ஓமன் அரசின் கருணையை எதிர்பார்த்துள்ளனர்.

இதற்கு முன் 2005, 2007மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது போல் இந்த ஆண்டும் பொதுமன்னிப்பு வழங்கப்படுமா என வினவப்பட்டபோது 'இன்றைய நிலையில் அப்படி ஒரு திட்டமே அரசிற்கு இல்லை' என வேலைவாய்ப்புத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மட்டும் சுமார் 19,000 சட்டவிரோத தொழிலாளர்கள் நாட்டை விட்டு வெளியேற விண்ணப்பித்திருந்ததாகவும் அவர்களில் பலர் சட்ட நடவடிக்கைகளுக்கு பின் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இன்னொருபுறம் சட்டவிரோத தொழிலாளர்களை கைது செய்யும் அதிரடி சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன. தொழிலாளர்களை கைது செய்யும் அதிரடி சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.