"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/12/16

சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகீர் நாயக் மற்றும் அவரது ஐஆர்ஆஃப் அறக்கட்டளை அமைப்புக்கு எதிராக அமலாக்கத் துறை கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
ஜாகீர் நாயக், அவரது இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எஃப்) அமைப்பு மீது மும்பையில் உள்ள அமலாக்கத் துறை பிராந்திய அலுவலக அதிகாரி, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைச் சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்கைப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஜாகீர் நாயக்குக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ ) மற்றோர் வழக்கைப்பதிவு செய்திருப்பது குறித்து அவரது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்த வழக்குத் தொடர்பான விவரத்தை அவர் கோரியுள்ளார்.
நாயக், ஐஆர்எஃப் அமைப்பு ஆகியோரின் வங்கிப் பரிவர்த்தனைகளை அமலாக்கத் துறை ஏற்கெனவே நகலாக எடுத்துள்ளது. இந்த வழக்கில் ஜாகீர் நாயக்குக்கும், அவரது அமைப்புக்கும் விரைவில் அமலாக்கத் துறை அழைப்பாணைகள் அனுப்பவுள்ளது என்று அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வங்கதேசத் தலைநகர் டாக்காவில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர், ஜாகீர் நாயக்கின் உரையாடல்கள் தன்னை பயங்கரவாதத்தில் ஈடுபடும்படி தூண்டியதாக தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, ஜாகீர் நாயக் மீதும், அவரது ஐஆர்எஃப் அமைப்பு மீதும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, ஜாகீர் நாயக்கின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மும்பை போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.