"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/12/16

தாயின் வயிற்றில் உள்ள ‘கரு’ வளர்ச்சியடைய வேண்டுமா? இறைவனை தியானியுங்கள்…!

குழந்தை உண்டாயிருக்கக்கூடிய தாய்மார்கள், வயிற்றில் இருக்கக்கூடிய கரு நல்ல வளர்ச்சியடைய வேண்டுமென்றால், இறைவனைப்பற்றி நினைவுடன் இருக்கும் பொழுது, அந்த கரு நல்ல வளர்ச்சியடைவதாக இஸ்லாம் சொல்லித் தருகின்றது.

இதை, முஸ்லிம்களும் தாய்மார்களும் நம்பிக்கையோடு பின்பற்றுகின்றனர். இந்த முறையை கர்ப்பிணிப் பெண்கள் பின்பற்றும் பொழுது, குழந்தையின் ஆரோக்கியமும், உடல் வளர்ச்சியும் நல்ல முன்னேற்றம் அடையும் என்பது நம்பிக்கை.

தாய் வணங்குவதினால் குழந்தையின் ஞாபக சக்தி அதிகரிக்கிறது. மனிதக்கரு தாயின் கருவரையில் வளர்கிறது. கருவியல் (Embryology) குறித்த ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்கள் சிறு வயதில் குர்ஆனை மனனம் செய்யும் முஸ்லிம் குழந்தைகளையும் , அந்த தாய்மார்களையும் ஆய்வு செய்தனர்.

அக்குழந்தைகள் 2 வயதாக மழலை சொற்கள் பேசும் போதே குர்ஆனை பாராமல் ஓதுகின்றனர். இதன் காரணம் தாய் கருவுற்ற நிலையில் இருக்கும் போது அதிகமாக இறைவனை வணக்கம் செய்வதாலும் குர்ஆனை ஓதுவதாலும் அந்த சப்தங்களை குழந்தைக்கு எளிதில் மனனம் செய்ய உறுதுணையாக இருந்திருக்கிறது.

மேலும், ஞாபக மறதிகள் இக்குழந்தைகளை தாக்குவது மிகவும் கடினம் எனவும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள் ..!

அஞ்சுவோரைத் தவிர ( மற்றவர்களுக்கு ) இது பாரமாகவே இருக்கும் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

திருக்குர்ஆன் 2-45

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.