"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
18/12/16


இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியின் போது தலையில் பந்து தாக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பயர் பால் ரைபில், வரும் காலங்களிலும் ஹெல்மெட் அணிய போவதில்லை என்று பால் ரைபில் தெரிவித்துள்ளார்.

இந்தியா இங்கிலாந்து இடையே மும்பையில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் பீல்டிங்கின் போது இந்திய வீரர் புவனேஷ்குமார் வீசிய பந்து தவறுவதலாக அம்பயர் ரைபில் மீது தாக்கி அவர் சுருண்டு விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இனி வரும் போட்டிகளின் போது ஹெல்மெட் அணிவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அம்பயர் பால் ரைபில் “டெஸ்ட் போட்டிகள் ஐந்து நாள் நடப்பதால் ஐந்து நாளும் ஹெல்மெட் அணிந்து விளையாடுவது சாத்தியமில்லாத ஒன்று, மேலும் ஹெல்மெட் வெயிட்டா இருப்பதாலும் ஹெல்மெட் அணிந்தால் வெயிலின் தாக்கத்தால் நாம் அதிகமாக பாதிக்கப்படுவதாலும் ஹெல்மெட் அணிவது சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.