"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

விமானப்படையில் பின்பற்றப்படும் உடை கட்டுப்பாடு மதசுதந்திரத்தில் தலையிடுவது கிடையாது என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

கடந்த 2008 ம் ஆண்டு தாடி வளர்த்ததற்காக அன்சாரி அப்தப் அஹ்மத் என்பவர், விமானப்படையில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து அன்சாரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: தாடி வைப்பது என்பது எனது மதம் வழங்கிய அடிப்படை உரிமை. சீக்கியர்கள் நீண்ட முடி வைக்கவும், தாடி வைக்கவும், டர்பன் வைக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. அதே உரிமை எனக்கு வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.அவரவர் விருப்பம்இந்த மனுவுக்கு பதிலளித்து இந்திய விமானப்படை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், அனைத்து முஸ்லீம்களும் தாடி வைப்பதில்லை.

தாடி வளர்ப்பது என்பது வைப்பது என்பதும் அவரவர் விருப்பம். தாடி வைப்பது என்பதை சர்வதேச அளவில் முஸ்லீம் மதத்தில் சொல்லப்படவில்லை. முடி வெட்டுபவரையும், தாடியை எடுப்பவரையும் முஸ்லிம் மதம் தடை செய்யும் என சொல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனு தலைமை நீதிபதி தாக்கூர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி, விமானப்படையில், தாடி வைக்க தடை செய்வது என்பது மத சுதந்திரத்தில் தலையிடுவது போல் இல்லை.

முப்படைகளில், விதிமுறைகள் என்பது ஓழுக்கம் மற்றும் சமநிலையை பின்பற்றவே கடைபிடிக்கப்படுகிறது. உடை கட்டுப்பாடு கடைபிடிக்கப்படுவது என்பது குற்றச்செயல் அல்ல எனக்கூறி மனுவை இன்று தள்ளுபடி செய்தது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.