"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/12/16

கட்டாரில் தொழிலாளா் நல சட்டங்கள் ( Law No. 21 of 2015)13ம் திகதியான இன்று முதல்  அமூலாக்கம் செய்யப்பட இருப்பதாக கட்டார் உத்தியோக பூா்வ அரசாங்கம்  அறிவித்துள்ளது.

புதிய சட்ட திருத்தம் தற்போது அமூலில் உள்ள “Kafala system” இல்லாமல் ஆக்கி கட்டாரில் உள்ள  2.1 மில்லியன் தொழிலாளா்களுக்கும் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் வழங்கும் என்பதாக ஊடகவியலாளா் மாநாட்டில் Minister of  Administrative Development Labour and Social Affairs Dr. Issa bin Saad Al  Jafali Al Nuaimi அவா்கள் அறிவித்துள்ளார்.

மேற்படி புதிய சட்ட திருத்தங்கள் தொடா்பாக கருத்து  தெரிவிக்கும் போது,
எமது கட்டார் நாடு கட்டாரின் வளா்ச்சிப் பணிகளில் தங்களை அா்ப்பணித்துள்ள வெளிநாட்டு தொழிலாளா்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன் புதிய திருத்தங்கள் கட்டாரில்  பணிபுரியும் அனைவரினதும் பாதுகாப்பையும் மற்றும் உரிமைகளையும் உறுதிப்படுத்தும் என்றார்.

பழைய “Kafala system” இல்லாமல் செய்யப்பட்டு புதிய ”contract-based system” அறிமுகம் செய்யப்பட்டுள்ளமையானது பணியாளா்களின் உரிமை வழங்குவதோடு வேலை நெகிழ்வுத் தண்மையையும் வழங்குகின்றது.  புதிய சட்டங்கள் தொடா்பான கருத்துக்களையும், ஆக்க பூா்வமான விமா்சனங்களையும் வரவேற்கின்றோம் , அப்படி நீங்கள் வழங்கினால் எதிர் காலத்தில் பிரயோசனம் அளிக்கும் என்றார்.

மேற்படி புதிய சட்ட திட்டங்கள் சரியான முறையில் அமூலாக்கப் செய்யப்படுகின்றன என்ற விடயத்தில் கட்டார் அரசாங்கள் கூடிய கவனத்தை செலுத்தும் என்பதாகவும் அதற்காக compliance inspectors” அதிகாரிகளை”  வேலைக்கு அமா்தவுள்ளதாகவும்  brigadier Mohammed Ahmed Al Atiq Director General of the Department  of Passport and Expatriates Affairs in the Ministry of Interior அவா்கள் தெரிவித்தார்.

மேலும் அவா் கருத்து தெரிவிக்கும் போது,
புதிய சட்டத்திருத்தம் Law No. 21 of 2015  விடயத்தில் அரசாங்கள் அதிக முன்னுரிமைகளை  வழங்கிச் செயற்படும்.  இது தொடா்பான கண்காணிப்புக்கள் எதிர்வரும் வாரங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. பின்னா் அந்நடவடிக்கைகள் தொடரும்.

புதிய சட்ட திருத்தத்தில் வெளிநாட்டவா்கள்  வருடாந்த விடுமுறை அல்லது  அவசர நிலைமைகளில் employerக்கு அறிவித்து விட்டு கட்டாரை விட்டு வெளியேற உரிமையைக் கொண்டுள்ளனா்.

அத்துடன் பணியாளா்கள் ஒப்பந்தங்களை முடிக்காமல் அல்லது முடித்துவிட்டு employer க்கு அறிவித்து  (according to the terms of the contract) விட்டு  கட்டாரை விட்டு நிரந்தரமாக செல்லவும் உரிமைகளைக் கொண்டுள்ளனா். இது போன்ற சந்தா்ப்பங்களில் employer விடுமுறை  மறுக்கின்ற போது தொழிலாளா்கள் ”Exit Permit Grievances Committee” மேல் முறையீடு செய்ய முடியும். மேற்படி கமிட்டி அனைத்து விதமான முறையீடுகளுக்கும் 3 நாட்களுக்குள் பதில்களை வழங்கும். முக்கியமான விடயம் இதுபோன்ற சந்தர்ப்பங்ளில் மேற்படி வெளிநாட்டவா்கள் எந்தவிடமான குற்றச் செயல்களுடன் தொடா்புபடாதவராகவும், கடன் இல்லாத வராகவும் இருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளா்கள், கம்பனிகளுக்கிடையில் மாற விரும்வினால்  ஒப்பந்தக்தக் காலத்தை நிறைவு செய்திருந்தால் மட்டும் போதும், employer யிடம் அனுமதி பெறத் தேவையில் என்பதாக அறிவித்தார்.  open-ended contracts(Unlimited) ஒப்பந்தத்தில் கைச் சாத்திட்டவா்கள், ஐந்து வருடங்களின் பின்னா் தான் employerகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார்.

அனைத்து பணியாளா்களும் ஒப்பந்தத்தின் ஒரு பிரதி வழங்கப்பட வேண்டும் என்றும்  நாடு செல்லும் பணியாளா்கள், அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை  பெற்றிருக்க வேண்டும் என்பதாக அறிவிக்கப்பட்பட்டுள்ளது.

தொழிலாளா்களின் கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் Employerகருக்கும் 25000 கட்டார் றியால்கள்  அபராதம் விதிக்கப்படும் என்பதாகவும் அறிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.