"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
31/12/16

நைஜீரியா நாட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்க வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட சட்ட மசோதாவை அந்நாட்டு தலைமை இஸ்லாமிய அமைப்பு நிராகரித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறித்துவர்கள் சம அளவில் உள்ளனர்.

மதக் கொள்கைகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளிக்கும் அந்நாட்டில் இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக, இஸ்லாமிய மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு பரம்பரை சொத்தில் சரி பாதி பங்கு அளிப்பதில்லை என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய குற்றச்சாட்டாகும்.

இது தொடர்பாக இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படும் வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன் தினம் பாலின சட்ட மசோதா(gender equality bill) கொண்டு வரப்பட்டது.

கிறித்துவ மதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்படுவதால் கிறித்துவர்கள் இந்த சட்ட மசோதாவை வரவேற்றனர்.

ஆனால், நைஜீரியா நாட்டின் தலைமை இஸ்லாமிய அமைப்பு இந்த சட்ட மசோதாவை அதிரடியாக நிராகரித்துள்ளது.

இது குறித்து இஸ்லாமிய அமைப்பின் தலைவரான Mohamed Sa'ad Abubakar பேசியபோது, ‘ஆண்களுக்கு அதிகளவில் சொத்தில் பங்களிக்கும் இஸ்லாமிய கொள்கைகளை நாங்கள் மீற முடியாது.

இஸ்லாமிய கடவுளான அல்லா வகுத்த கொள்கைகளில் ஆண்களுக்கு தான் அதிகளவில் சொத்தில் பங்கு உள்ளது. எனவே, இந்த வரையறையை மீறி சட்ட மசோதாவை ஆதரிக்க முடியாது’ என கருத்து தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.