"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
4/12/16

இன்று மாலை 5.30 மணியளவில் அப்பல்லோவில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென்று இருதய கோளாறு ஏற்பட்டு, டாக்டர்களுடைய தீவிர சிகிச்சையினால் முதல்வரின் உடல்நிலை ஓரளவு சீராகியுள்ளதாக டாக்டர்கள் வட்டாரம் கூறுகிறது.
என்ன நடந்தது?
அப்பல்லோவில் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருக்கும் முதல்வர் ஓரளவு குணமாகி வந்த சூழலில் இன்று மூச்சுத்திணறல் அவருக்கு அதிகரித்துள்ளது. உடனடியாக முதல் தளத்துக்கு கொண்டு வரப்பட்ட முதல்வர் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்பல்லோவின் இருதய சிகிச்சை டாக்டர்கள் இன்று விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை என்பதால் மருத்துவமனையில் இல்லை. அவசர அவசரமாக அவர்கள் உடனே அழைக்கப்பட்டார்கள். நேற்று டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் டாக்டர்களும் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கத் தொடங்கினர்.
சென்னைக்கு விரையும் அமைச்சர்கள்
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் தொகுதி பக்கம் சென்றிருந்த மூத்த அமைச்சர்களுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் இருந்த அமைச்சர்கள் யாரிடமும் எதையும் தெரிவிக்காமல் உடனடியாக சென்னைக்கு விரைந்து வருகிறார்கள்.
அப்பல்லோவில் தலைமைச் செயலாளர்
தகவல் தெரிந்தவுடன் சென்னையில் இருந்த தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அப்பல்லோவுக்கு பதற்றத்துடன் விரைந்து வந்தார். டாக்டர்களிடம் ஆலோசனை நடத்தினார். மேற்கொண்டு சிகிச்சையை எப்படி கொண்டு செல்வது என்று சிங்கப்பூரில் இருக்கும் டாக்டர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார்.
நடக்கும் சிகிச்சை
திடீரென்று மூச்சுத்திணறல் அதிகமாகி இதயத்தைத் தாக்கியதால் தீவிர சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நிலையைக் கட்டுக்குள் முழுமையாக கொண்டு வர டாக்டர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.