"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
7/12/16

ஜேர்மனியில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணிய தடை விதிக்கப்படும் எனவும் அது தமது நாட்டு கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல எனவும் சான்சலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் தமது கட்சி கூட்டத்தினிடையே பேசும்போது குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு பார்வையாளர்களிடையே பெருத்த வரவேற்பு காணப்பட்டது. முழு முகத்திரை அணிவது என்பது ஜேர்மனியின் கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என கூறிய அவர் சட்டப்பூர்வமாக இதை தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார். குறித்த வலியுறுத்தலை Christian Democratic Union கட்சியின் தலைவர்கள் வெளியிட்டு வருவது இது முதன் முறை அல்ல. கடந்த ஆகஸ்ட் மாதம் இதே கருத்தை உள்விவகாரத்துறை அமைச்சர் Thomas de Maiziere ஒரு பொதுகூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7   

நமது சமூகத்திற்கு இந்த முழு முகத்திரை ஒத்துப்போவதாக இல்லை எனவும் முகம் பார்த்து பேசுவதே நமது வழக்கம் அதனாலே உங்கள் முகத்தை வெளிக்காட்ட கேட்கிறோம் என்றார் அவர்.

நான்காவது முறையாக சான்சலர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக மெர்க்கல் அறிவித்த சில வாரங்களிலேயே குறித்த தடை கோரும் கோரிக்கையும் அவர் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

62 வயதாகும் ஏஞ்சலா மெர்க்கலுக்கு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தல் சவால்கள் நிறைந்ததாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முழு முகத்திரைக்கு தடை கோரும் ஜேர்மனியின் இந்த வலியுறுத்தலை இதற்கு முன்னர் பிரான்ஸ் பெல்ஜியம் மற்றும் சுவிஸ் நாடுகளில் கோரப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.