"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/12/16

வி.களத்தூர் சுன்னத்வல் ஜமாத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து நடத்தும் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

வி.களத்தூரில் நாளை மறுநாள் 31.10.16 (சனிக்கிழமை) ஜாமியா மஸ்ஜிதில் சுன்னத்வல் ஜமாஅத் மற்றும் அக்செஸ் இந்தியா இணைந்து மாணவர்களுக்கான கல்வி வழிக்காட்டி நடத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சிக்கு ஜமாத்தார்கள் தலைமை வகிக்கிறார்கள்.
சிறப்புரை ஆற்ற அக்செஸ் இந்தியா skill trainers N.அபுதாகிர், M.Sc,M.phil மற்றும் S.ரியாஸ்,MBA. ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

1. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் பொது தேர்விற்கு எவ்வாறு தம்மை தயார் படுத்திக்கொள்வது?

2.பாடங்களை எவ்வாறு படிக்க வேண்டும்? எளிய வகையில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

3.என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? போன்ற ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.

மேலும் அரசு வேலை வாய்ப்புகள் குறித்தும் எப்படி தயார் படுத்தி கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.

மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு வாய்ப்பினை பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

பெண்களுக்கு தனி இட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.