"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/12/16

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பின்னர் அவர் சட்டசபையில் பங்கேற்றது சில நாட்கள் மட்டுமே.
மக்களின் முதல்வர் என்று கூறிக்கொள்ளும் ஜெயலலிதா, மக்கள் முன்னிலையில் தோன்றவில்லை என்பதை சுட்டிக்காட்டி எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் திகதி இவர் சட்டசபையில் கடைசியாக பங்கேற்றார். அதன்பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக, மருத்துவமனைக்கு சென்ற இவரின் இறப்பு செய்திதான் மக்களிடம் வந்தடைந்தது.

செப்டம்பர் 2 ஆம் திகதி சட்டசபையில் நடந்தது
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசும்போது, 'காவல் துறையினருக்கு, 32 மாவட்டங்களில் வீடு கட்டி கொடுக்கப்படும் என முதல்வர் 110 விதியின் கீழ் அறிவித்தார்.
அதன் படி காஞ்சிபுரம், மேலக்கோட்டையூரில் வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. மற்ற மாவட்டத் தலைநகரங்களில், வீடு கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த ஜெயலலிதா, காவலர்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுப்பது குறித்து யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம். திமுகவினர் கேட்கக் கூடாது. அதை கேட்க அருகதை அவர்களுக்கு இல்லை.
காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டேன். காவல் துறையினருக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க, எம்.ஜி.ஆர் 1980ல் காவல் துறை வீட்டு வசதிக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அவரே திட்டத்தை துவக்கி வைத்தார்.
பின், 1989ல் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, அந்த அமைப்பை கலைத்து இழுத்து மூடினார். 1991ல் நான் முதல்வரான பின் காவல் துறை வீட்டு வசதி கழகத்தை மீண்டும் துவக்கினேன்.

காவல் துறையினருக்காக, பிரத்யேகமாக துவங்கப்பட்ட, காவல் துறை வீட்டு வசதி கழகத்தை கலைத்து, இழுத்து மூடிய, திமுகவினருக்கு இது குறித்து கேள்வி கேட்க அருகதை இல்லை என்று பதில் அளித்தார்.
இந்த பேச்சுதான் ஜெயலலிதாவின் கடைசி பேச்சாக அமைந்தது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.