vkrnajur vkrnajur Author
Title: சிரியப்போர் எனது ஆட்சிப்பருவத்தில் தீர்க்க முடியாத போர் ஒபாமா !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சிரியாவில் அலிப்போ நகரம் வீழ்ந்துவிட்ட வெற்றி விழா ரஸ்யாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அலிப்போ வீழ்ச்சி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின் தோல்வி அ...
சிரியாவில் அலிப்போ நகரம் வீழ்ந்துவிட்ட வெற்றி விழா ரஸ்யாவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது, அலிப்போ வீழ்ச்சி ஒபாமாவின் ஆட்சிக்காலத்தின் தோல்வி அவருடைய வெளிநாட்டுக் கொள்கைகள் காலத்திற்கு ஒவ்வாதவை தூக்கி வீசப்பட வேண்டியவை என்று மேலைத்தேய ஊடகங்கள் பல எழுதி வருகின்றன.

இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு நேற்று அதிபர் ஒபாமா பதிலளித்துள்ளார், இதுபற்றி அவர் கூறும்போது..

தனது ஆட்சிப்பருவத்தில் தீர்க்க முடியாமல் போன இந்தப் பிரச்சனையைப் பற்றி அன்றாடம் படுக்கப்போகும்போது சிந்தித்ததாகக் கூறுகிறார்.

இது நம்மால் தீர்க்க முடியாமல் போன பிரச்சனை என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால் இதற்காக நான் கடைப்பிடித்த வழி சரியானதுதான் என்பதையும் உறுதிபடக் கூறுகிறேன் என்று நுட்பமாக பதிலளித்துள்ளார்.

சிரியாவில் அமைதி ஏற்படுத்த அனைத்து வழிகளிலும் முயற்சி எடுத்தேன் ஆனால் அமெரிக்கப்படைகளை சிரியாவில் இறக்க யாரும் ஆதரவு தரவில்லை.

அப்படி இறக்கியிருந்தால் அது பேரழிவாக மாறியிருக்கும் அதற்காக பாரிய விலையைக் கொடுத்திருக்கவும் நோர்ந்திருக்கும்.

அந்த இழப்போடு ஒப்பிட்டிருந்தால் இந்தத் தோல்விகூட வெற்றிதான் என்ற தொனிப்பு அவர் குரலில் தெரிகிறது.

சிரியாவின் ஆஸாட் றெஜீமிற்கு துணையாக ரஸ்யாவும், ஈரானும் நிற்கின்றன, இதனால் அங்கு நடந்த போர் வேறொரு தளத்தில் இருந்தது.

ஆப்கானிஸ்தானைப்போல ஒரு மாற்றம் கொண்டுவரக்கூடிய பின்னணி அங்கு காணப்படவில்லை இதனால் போரை முன்னெடுக்க முடியாதிருந்தது.

அதையும்தாண்டி போர்க்களத்தில் இறங்கினாலும் அடுத்து ஆட்சியை ஏற்றுக்கொள்ள பலமுள்ள எதிரணி அந்த நாட்டில் இருக்கவில்லை.

ஆஸாட்டை வீழ்த்துவதைவிட சக்கட்டைகளை ஆட்சியாளராக்குவது பெரும் தலைவலி உதாரணம் ஈராக்கில் உதவாக்கரை ஆட்சியாளரை உருப்படுத்த இன்று படும்பாடு பெரும்பாடாக இருக்கிறது.

நாட்டை மீட்டுக்கொடுக்க ஐ.எஸ் அமைப்பிடம் பறி கொடுத்துவிட்டு அமெரிக்காவை பார்த்தபடி நிற்கிறார்கள், நாளை சிரியாவிலும் இதுதான் நடக்குமென்ற அச்சம் அவருக்கு இருப்பதை உரையின் பின்புறம் உணர்த்துகிறது.

இப்படி பல காரணங்களால் படை நடவடிக்கை எடுக்க முடியவில்லை, மறுபுறம் பிரச்சனையை வேறு வழிகளில் தீர்க்கவும் முடியவில்லை இதுவே தமது பின்னடைவு என்றார்.

மறுபுறம் இப்போது அப்பாவிகளை கொன்று, தூக்கில் போட்டு போர்க்குற்றமிழைத்து வருகின்றன மூன்று நாடுகளும் இவர்கள் நீதிக்கு முன்னால் நிற்க வேண்டி வரும் என்றும் கூறினார்.

இப்படி தனது பருவத்தில் தீர்க்க முடியாது போன பிரச்சனை என்று தலைப்பிட்டு பைலை மூடியிருக்கிறார் ஒபாமா..

போர் நடந்திருந்தால் கிளரி கிளிண்டன் வென்றிருப்பார் என்பது இன்னொரு பக்கமாகும்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top