"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/12/16

உலக அளவில் 2015 ஆம் ஆண்டுஅதிக ஆயுத விற்பனையை அமெரிக்கா சுமார் 40 பில்லியன் டாலர்களுக்கு மேற்கொண்டுள்ளது. 
அதேவேளை அதிக ஆயுத கொள்வனவை கட்டார் சுமார் 19 பில்லியன் டாலர்களுக்கு மேற்கொண்டுள்ளது.
உலக ஆயுத விற்பனை வர்த்தகத்தில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது. இதன் மூலம் சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை வருமானமாக பெற்றுள்ளது. இரண்டாவது நிலை விற்பனையில் பிரான்ஸ் 15 பில்லியன் டாலர்களும், ரஷ்யா 11.1 பில்லியன் டொலர், சீனா 6 பில்லியன் டாலர்கள் என தமது ஆயுத விற்பனை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளன.
இதில் அமெரிக்கா 4 பில்லியன் , பிரான்ஸ் 9 பில்லியன், மற்றும் சீனா 3 பில்லியன் டாலர்கள் என தமது விற்பனையை அதிகரித்துள்ளன. 
இந்நிலையில் சிரிய யுத்தத்தை தலைமையேற்று நடத்தும் ரஷ்யா 2014 ஆம் ஆண்டை விட 2015 இல் ஆயுத விற்பனை சரிவை கண்டுள்ளது. ஆயுத கொள்வனவில் கட்டார் சுமார் 19 பில்லியன் டாலர்களுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளது. அடுத்தப்படியாக எகிப்து 12 பில்லியன், சவூதி அரேபியா 8 பில்லியன் டாலர்கள் எனவும் கொள்வனவு செய்திருக்க, இந்நாடுகளுக்கு அடுத்த நிலையில் தென் கொரியா, பாகிஸ்தான், ஈராக் உள்ளிட்ட நாடுகள் அதிக ஆயுத கொள்வனவில் ஈடுபட்டுள்ளன.
குறித்த தரவுகள் அமெரிக்க பாராளுமன்ற ஆய்வறிக்கை குழுவால் வெயிடப்பட்டுள்ளன. அத்தோடு 2014 ஆம் ஆண்டு 89 பில்லியன் டாலர்கள் விற்பனையான உலக ஆயுத சந்தையானது 2015 ஆம் ஆண்டு 80 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்துள்ளது.
இருப்பினும் உலக அமைதிக்காக பாடுபடுவோம் என சூலுரைக்கும் அமெரிக்கா ஒவ்வொரு வருடமும் அதிகளவிலான ஆயுத விற்பனையை முன்னெடுத்து வருகின்றமை கவனிக்கத்தக்க விடயமாகும்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.