"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
21/12/16

வி.களத்தூரில் இன்று மதியம் 1.10 மணியளவில் IOB வங்கி கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் மீண்டும் ஈடுபட்டன. சென்ற மாதம் 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர்.

நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வி.களத்தூர் IOB வங்கியில் பணம் வழங்காமல் அலைக்கழிப்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடந்த நவம்பர் 30 தேதி சாலை மறியல் ஈடுபட்டனர்

அதனை படிக்க -

சாலை மறியல் எதிரொலியாக வங்கியில் 1 நபருக்கு தலா ரூ 2000 என 300 நபர்களுக்கு மேல் பணம் வழங்கி வந்தது IOB வங்கி. ஆனால் இன்று மதியம் மீண்டும் பணம் இல்லை என வங்கி அதிகாரிகள் கூறினார்கள். 100க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரம் வரிசையில் காத்து கிடந்ததால், வங்கியின் இந்த முடிவையும் ஏற்க மறுத்து ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் வி.களத்தூர் - பசும்பலூர் இடையே சாலை போக்குவரத்து சற்று நேரம் பாதிக்கப்பட்டன இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

இதையடுத்து வங்கி நிர்வாகிடம் காவல்துறை முன்னிலையில் பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்தனர்.

இதையடுத்து வரிசையில் நின்ற பொது மக்களுக்கு டோக்கன் வழங்கி நாளை பணம் பெற்றுக்கொள்ளுமாறு வங்கி அதிகாரிகள் கூறினார்கள். தினமும் 250-300 பேருக்கு டோக்கன் வழங்கவும் ஒப்புக்கொண்டது IOB வங்கி. இதனால் பொதுமக்கள் சற்று கலைந்து சென்றனர்.
 

 
 
 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.