"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/12/16

குவைத், டிச-10 நேர்மையாளர்கள் இன்னும் உலகிலிருந்து அற்றுப்போகவில்லை என்பதை அடிக்கடி பல சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன, அப்படியொரு சம்பவம் குவைத்திலும் நடந்துள்ளது.

குவைத்தில் செயல்படும் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றுபவர் ஜூதா ஜமால் அப்துஸ் ஸலாம் என்ற வெளிநாட்டவர், யாரோ ஒருவர் தவறுதலாக விட்டுச் சென்ற ஒரு பையை கண்டெடுக்கின்றார் அதில் 6,600 குவைத் தினாரும் 3,000 அமெரிக்க டாலரும் இருந்துள்ளது. இது அவர் பெற்று வந்த மாதாந்திர சம்பளமான 100தினாரை விட 75 மடங்கு கூடுதலானது.

சிறிது நேரம் பணத்தை தவறவிட்டவருக்காக காத்திருந்தவர் யாரும் வராததால் உடனடியாக தனது ரியல் எஸ்டேட் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். சுமார் 2 மணி நேரம் கழித்து பணத்தை தவறவிட்டவர் தேடிவந்து பெற்றுச் சென்றார்.

ஜூதா ஜமால் பணத்தை தனது அலுவலகத்தில் ஒப்படைக்கும் போது அவரது மேலதிகாரி, நீ பணத்தை எடுக்கும் போது யாரும் பார்க்கவில்லையா? ஏன வினவ, 'நிச்சயமாக என்னை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருந்தான்' என பதிலளிக்க, அவரது பதிலாலும் நேர்மையாலும் ஈர்க்கப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனம் சிறப்பு நிகழ்ச்சி மூலம் பாராட்டுகளையும், பரிசுகளையும் வழங்கி கௌரவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.