"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/12/16

நான்...! நான்...!! நான்...!!!

நான் சம்பாதித்தேன் நான் காப்பாற்றினேன் நான் தான் வீடு கட்டினேன் நான் தான் உதவி செய்தேன் நான் உதவி செய்யலனா அவர் என்ன ஆகுறது நான் பெரியவன் நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன் நான் நான் நான் நான் என்று மாறுதட்டி கொள்ளும் மனிதர்களே...

நான்தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் கலக்குகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா??

நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?

நான் தான் காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா ?

நான் தான் கடலில் மீன் பிடிக்கிறவனுடைய வலையில் மீனை சிக்க வைக்கிறேன் என்று உன்னால் சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே நான் என்று சொல்வதற்கு அதிகாரமும் உரிமையும் உண்டு.

-As Received-

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.