"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
30/12/16

பஹ்ரைனில் இளம் பெண் பத்திரிக்கையாளர் தனது 6 வயது மகன் முன் நடுரோட்டில் வைத்து அரச குடும்பத்தினர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மாநில தொலைக்காட்சியில் விளையாட்டு பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்த 28 வயதான Eman Salehi என்ற பெண்ணே கொல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 23ம் திகதி Riffa நகரத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று மர்ம நபர் ஒருவர் Eman Salehiயின் காரை நிறுத்தி அவரை தலையில் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், அவராகவே அதிகாரிகளிடம் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் பஹ்ரைனை ஆளும் அல் கலிபா அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் எனவும், 34 வயதான அவர் பஹ்ரைன் பாதுகாப்பு படை அதிகாரியாகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

எனினும், தற்போது வரை கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. குற்றவாளி காவலில் இருக்கும் நிலையில் சம்பவம் குறித்து ஆயுதப் படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக நாட்டின் இராணுவ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.