"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
8/12/16

தமிழக அதிமுக அரசியலில் அரசியல் சதிகாரணமாக தலைவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் கூட ஓரம் கட்டப்படுவது அவமானப்படுத்துவது வழக்கமாகிவிட்டது.

அன்று ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து கொள்கைப் பரப்பு செயலாளராக உயர்ந்து. எம்.ஜி.ஆர். உடல் நலக்குறைவாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது தலைவர்கள் எம.ஜி.ஆரை ஆக்கிரமித்து கொண்டு ஜெ., வை பார்க்க விடவில்லை.

எம.ஜி.ஆர். இறுதி ஊர்வலத்தின் போது ராணுவ வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டு, தள்ளிவிட்டு அசிங்கப்படுத்தப்பட்டார் ஜெயலலிதா.
அடுத்து  சென்ற வண்டியில் கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அன்று ஜெயலலிதா பட்ட அவமானத்திற்கு போராடி அதிமுகவை கைப்பற்றி தமிழகத்தின் தாயாக மாறினார்.

இன்று ஒரே ரத்த சொந்தம் அண்ணன் மகள் தீபா தனக்கு அரசியல் வேண்டும், ஆட்சி அதிகாரம் வேண்டும், அரசியல் வாரிசாக வேண்டும் என்று கேட்க வில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7    

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது பார்க்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டார். கட்சியை தன்வசப்படுத்த நினைக்கும் சிலர் அவரை அனுமதிக்காமல் விரட்டி அடித்தனர்.

ஜெயலலிதா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட போது அருகில் கூட நிற்க விடாமல் போலீசை விட்டு துரத்தினர். இரண்டு நாள் கழித்து சமாதியில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

இது போல ஜெயலலிதாவின் குடும்பத்திற்கு தொடருது அவமானம். வரலாறு மீண்டும் திரும்புமா என எதிர் பார்க்கின்றனர் அதிமுகவினர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.