"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/12/16

கைப்பேசிக்கு அடிமையாக இருக்கும் இன்றைய இளைய தலைமுறையினர், அதன் மூலம் அறிவுப்பூர்வமான வியடங்களை அறிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை தொலைத்துக்கொள்வது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.

காலையில் எழுவது முதல், இரவில் தூங்க செல்வது வரை கைப்பேசியை கூடவே வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக தங்கள் தூங்க செல்வதற்கு முன்பு கைப்பேசியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தூங்க செல்வதற்கு முன்னர் கைப்பேசி பயன்படுத்தினால் உடல் ரீதியாகவும், மனம் ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
40 வயதான நபர் ஒருவரது கண்கள் சிவந்துபோய் காணப்பட்டதால் மருத்துவரை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு கண் புற்றுநோய் ஏற்பட்டு, பார்வையை இழந்துவிடும் அளவுக்கு மோசமான நிலையை அடைந்துள்ளார்.

இதற்கு காரணம் என்னவெனில், இவர் தினமும் தூங்கசெல்வதற்கு முன்னர் கைப்பேசியை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். கைப்பேசியின் தொடுதிரையிலிருந்து வரும் ஒளியானது இந்நபரின் விழித்திரையை பாதித்துள்ளது.

இதன் காரணமாக இந்நபரால் சரியாக பார்க்கமுடியவில்லை. இரவில் கைப்பேசி பயன்படுத்தியதன் தாக்கமே இவருக்கு கண் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை மருத்துவ ரீதியாக விழித்திரை மாற்று அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படாத காரணத்தால், தற்போது இந்நபருக்கு முதலுதவி மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் தூங்கசெல்லும் முன்பு, கைப்பேசியின் ஒளி அளவினை குறைந்த அளவில்லை வைத்திருந்தாலும், அந்த ஒளியானது உங்கள் கண்களை உலர செய்து, கண் புற்றுநோய் அல்லது கண் பார்வையை நிரந்தரமாக பறித்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.