"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
6/12/16

நேற்று இரவு மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலை அப்பல்லோவில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டுவருவதற்கு முன்னரே, போலீசார் தொண்டர்களை கட்டுப்படுத்தும்விதமாக சில ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். ஆனால் அப்பல்லோ மருத்துவமனையில் வைத்தே அதிருப்தியடைந்த தொண்டர்கள், போயஸ் இல்லம் அருகே குவிந்து விட்டனர். அவரது உடலைக் கொண்டுவந்த வாகனம் அப்பல்லோவில் இருந்து கிளம்பி மூன்றே நிமிடத்தில் போயஸ் கார்டன் வந்துவிட்டாலும் போயஸ்கார்டனில் இருந்து ஜெயலலிதாவின் வேதா நிலையத்தினுள் செல்ல, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலானது. அம்மாவின் முகத்தைப் பார்க்க முட்டி மோதிய தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினார்கள். லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்துதான் ஆம்புலன்ஸை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். ஆனால் தொண்டர்களின் கோபம் அதிமுக தலைவர்கள்மீது திரும்பியது. அவர்கள், அமைச்சர்கள் வந்த வாகனங்களை மறித்தனர். இப்படி, இன்று அதிகாலை தொடங்கிய தள்ளுமுள்ளு நடக்கும்போதே ராஜாஜி ஹாலுக்குச் சென்றாவது அம்மாவின் முகத்தைப் பார்த்துவிடுவோம் என்று, உடனே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ராஜாஜி ஹாலுக்குச் சென்றுவிட்டார்கள்.
அதிகாலை நான்கு மணிககு ராஜாஜி ஹாலுக்கு அவரது உடல் கொண்டுவந்து வைக்கப்பட்டபோது அங்கே பல்லாயிரம் தொண்டர்கள் கூடிவிட்டார்கள். பொதுமக்களின் உடலுக்கு எம்.ஜி.ஆர். உடலை அஞ்சலி செலுத்த வைத்ததுபோல ஜெயலலிதாவின் உடலையும் வைப்பார்கள் என்று எதிர்பார்த்தநிலையில், தொண்டர்களால் அவரது உடலை நெருங்கவே முடியவில்லை. இதனால் தொண்டர்கள் கடுமையான அதிருப்தி அடைந்துள்ளனர். மதியம் 4 மணிக்குமேல் ஜெயலலிதாவின் உடல் இறுதி நிகழ்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுவிடும் என்றநிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் தங்கள் தலைவியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்று அழுதபடியே இருக்கிறார்கள். காரணம், கூட்டத்தைக் கட்டுப்படுத்த என்று ஆங்காங்கே தொண்டர்கள்மீது நடத்தப்பட்ட தடியடி.தொண்டர்கள் மட்டுமல்ல; கீழ்நிலையில் இருக்கும் தலைவர்களால்கூட இறுதி அஞ்சலிக்காக நெருங்க முடியவில்லை.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.