"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/12/16பதிவு செய்தும் ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் மற்றும் ஆதார் அட்டை தொலைந்தவர்கள் தங்களது எண்களை பெறுவதற்காக தமிழகத்தில் 301 இடங்களில் உதவி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

இன்று முதல், வரும் ஃபிப்ரவரி 28ம் தேதி வரை செயல்படும் இந்த மையங்கள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வரும் ஃபிப்ரவரி 28ம் தேதி வரை 301 இடங்களில் பொதுமக்களுக்கு ஆதார் எண் வழங்குவதற்கான உதவி மையங்கள் செயல்படவுள்ளன.

தமிழ்நாட்டில், சுமார் ஆறரை கோடி பேருக்கு இதுவரை ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்து ஆதார் அட்டை அல்லது ஆதார் எண் கிடைக்கப் பெறாதவர்கள், தொடர்ந்து ஆதார் சேர்க்கை மையங்களுக்கு சென்று பதிவு செய்வதால், இம்மையங்களுக்கு அதிக அளவில் பொதுமக்கள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆதார் எண்ணுக்கு ஏற்கெனவே பதிவு செய்துவிட்டு, கிடைக்கப் பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையைத் தொலைத்தவர்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை மற்றம் கருவிழிகளைப் பதிவு செய்து சில விநாடிகளில் தங்களது ஆதார் எண்ணை அறிந்துகொள்ளலாம். 

இந்த எண்ணை அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து பதிவு செய்தபின்னர், 30 ரூபாய் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம். மேலும், 10 ரூபாய் மட்டும் செலுத்தி, காகிதத்திலும் அச்சிட்டு பெற்றுக்கொள்ளலாம்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.