"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)

.

.
19/12/16

சவூதி பெண்களை வெளிநாடுகளில் வசிக்கும் ஆண்கள் திருமணம் செய்துக்கொள்வது குறித்து ஒரு இறுக்கமான சட்டம் ஒன்றை அமுல்படுத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சவூதி நாட்டுப் பெண்களைத் திருமணம் முடிக்கும் பிறநாட்டு ஆண்களை போதைப் பொருள் பாவனை குறித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் திட்டத்தைக் கொண்டுவர உள்ளது.திருமணத்திற்கு பிறகு போதைப்பொருள் பாவனையால் சமூகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த திட்டத்தை சவூதி அரசாங்கம் கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் இந்த புதிய நடைமுறை தொடர்பில் சுகாதார அமைச்சு சகல வைத்தியசாலைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது.

இந்த புதிய நடைமுறையினால் விவாகரத்து பிரச்சினைகளும் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வருடம் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 3596 ஆண்கள் வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்துள்ளனர்.

இதேபோல் சவூதி அரேபியாவைச் சேர்ந்த 3352 பெண்கள் வெளிநாட்டு ஆண்களைத் திருமணம் செய்துள்ளனர் என அந்நாட்டு புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு சவூதியில் 133000 திருமணங்களும் 40000 விவாகரத்துக்களும் இடம்பெற்றுள்ளன. ஆசியா தெற்காசியா ஆபிரிக்கா ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளைச் சேர்ந்த பலர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.