"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

இந்தியாவில் பெங்களூருவைச் சேர்ந்த முஹம்மது ஷெரிஃப் ஏராளமான அரசு அலுவலகங்களுக்குச் சென்றும் முழுதாக இரண்டு மாதங்கள் போராடியும் தன்னுடைய செல்லப் பிராணியான ஒட்டகத்தைத் தன் வீட்டுக்குத் திரும்பக் கொண்டுவந்துள்ளார்.

துமக்கூரைச் சேர்ந்த 31 வயது தொழிலதிபர் முஹம்மது ஷெரிஃப். இவர் பாலைவனக் கப்பலான ஒட்டகத்தின் மீது தீராத பெரும் விருப்பம் கொண்டவர். தன்னுடைய வீட்டுக்கே ஒட்டக வீடு என்று தான் பெயர் சூட்டியுள்ளார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய முதல் செல்லப் பிராணியாக ஓர் ஒட்டகத்தை அவர் வாங்கியுள்ளார். அந்த ஒட்டகம் தற்போது அவரின் அத்திப்பள்ளி தோட்ட வீட்டில் உறவினர்களின் கவனிப்பில் உள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்பத்தில் மற்றொரு ஒட்டகத்தை அதன் ஒன்பது மாதக் குட்டியோடு ராஜஸ்தானில் இருந்து ரூ. 68000- க்கு வாங்கியுள்ளார் ஷெரிஃப்.

சோதனை ஆரம்பம் பக்ரீத் முடிந்த ஒரு வாரத்தில் தும்கூர் காவல்துறையோடு ஏராளமான விலங்குகள் நல ஆர்வலர்கள் ஷெரிஃப் வீட்டுக்கு வந்துள்ளனர். இது குறித்துப் பேசிய ஷெரிஃப் நான் ஒட்டகங்களைக் கொல்லும் எண்ணத்தில் வாங்கவில்லை என அவர்கள் கூறினர். என்னுடைய வார்த்தைகளை யாரும் கேட்பதாக இல்லை.

காவல்துறை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. மகாதேவபுராவில் உள்ள மீட்பு மையத்தில் என்னுடைய ஒட்டகங்கள் விடப்பட்டன. நீதிமன்றத்தை நாடுவதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. தொடர்ந்த போராட்டங்களுக்குப் பிறகு தும்கூர் மாவட்ட நீதிமன்றம் ஒட்டகங்களை திருப்பித் தரச்சொல்லி உத்தரவிட்டது.

ஆனால் காவல்துறையும் மீட்பு மையங்களும் ஒட்டகங்களை விடுவதாக இல்லை. திரும்பவும் நீதிமன்றத்தின் வாயிலில் சரணடைந்தேன். விளைவாக என்னுடைய நண்பர்கள் டிசம்பர் 5-ம் தேதியன்று எனக்குத் திரும்பக் கிடைத்தனர்.

ஆனால் அவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து அளிக்கப்படவில்லை. மிகவும் சோர்வாகக் காணப்பட்டதால் அவர்களுக்கு தும்க்கூரு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிறார் நான்கு கால் நண்பர்களைக் கொண்ட மொகமது ஷெரிஃப்.

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.