"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனாட் ட்ரம்பின் வெற்றி, மறு வாகு எண்ணிக்கையிலும் உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். அவர் 2017 ஜனவரியில் பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில், விஸ்கான்சின், பென்சில்வேனியா உள்ளிட்ட சில மாகாணங்களில் அவர் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு முறைகேடு நடந்ததாகக் கூறி மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதை ஏற்று, விஸ்கான்சின் மாகாணத்தில், மறு வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ட்ரம்ப் வெற்றி, மீண்டும் உறுதி செய்யப்பட்டது. அங்கு, ஹிலாரியை விட கூடுதலாக 22 ஆயிரம் வாக்குகள் பெற்று ட்ரம்ப் வெற்றி பெற்றதை தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இதற்கிடையே, பென்சில்வேனியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அம்மாகாண நீதிபதி பால் டைமண்டு தள்ளுபடி செய்தார். ‘ஹிலாரியை விட ட்ரம்ப் 44 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்றுள்ள நிலையில் அவரது வெற்றி உறுதி செய்யப்படுகிறது’ என அவர் அறிவித்தார்.

இதன் மூலம் அமெரிக்காவில் மறு வாக்கு எண்ணிக்கை சர்ச்சை முடிவுக்கு வந்தது. டொனால்ட் டிரம்ப் வெற்றி மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.