Mohammed Farook Mohammed Farook Author
Title: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக பேசும் வசதி அறிமுகம்
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
இதற்கென இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது, கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் மாதம் வரை இலவசமாக பேசும் வசதி, இலவச இ...
இதற்கென இரண்டு பிளான்களை அறிவித்துள்ளது, கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் டிசம்பர் மாதம் வரை இலவசமாக பேசும் வசதி, இலவச இணையதள வசதி, இலவசமாக மெசேஜ் அனுப்பும் வசதிகளுடன் அதிரடியாக களத்தில் குதித்தது. இதனால் மிகக் குறைந்த காலத்தில் மிக அதிக வாடிக்கையாளர்களை பெற்றது. அதே நேரத்தில் மற்ற நிறுவனங்கள் பெரிய சரிவைக் கண்டன.

தற்போது ஜியோ நிறுவனம் இந்த இலவச சேவையை “Happy New Year Offer” என்ற பெயரில் 2017 மார்ச் மாதம் வரை நீட்டித்துள்ளது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஏர்டெல் நிறுவனம் இந்த இலவச சேவையை அறிவித்துள்ளது. ரூபாய் 345 மற்றும் ரூபாய் 145-க்கு இந்த பிளான்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 345 பிளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் இலவசமாக பேச இயலும். மற்றும் 1GB 4G data-உம் பயன்படுத்திக்கொள்ளலாம். 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம். ரூபாய் 145 ப்ளான் உபயோகிப்பவர்கள் இந்தியா முழுவதும் ஏர்டெல் உபயோகிப்பவர்களுடன் மட்டும் இலவசமாக பேச இயலும் மற்றும் 300MB 4G data இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். இதிலும் 3G/4G வசதி இல்லாத பயன்பாட்டாளர்கள் 50MB data பயன்படுத்தலாம்.

இரண்டு பிளான்களும் 28 நாட்கள் கால அளவு வரை உபயோகப்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் இந்த விலையானது மாறுபடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆரம்பம் தான் என்றும் இதுபோல் இன்னும் நிறைய ப்ளான்கள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏர்டெல் மட்டுமின்றி, ஏர்செல் நிறுவனமும் மூன்று மாதங்களுக்கு இலவச சேவையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top