"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/12/16

இந்தியாவில் சமீபத்தில் கர்நாடக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி ரு.500 கோடி செலவில் தனது மகளின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி பிரம்மிக்க வைத்தார். இந்நிலையில் மும்பையின் அவுரங்காபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜ் முனோத் தனது மகள் ஷ்ரேயாவின் திருமணத்தை முன்னிட்டு குடிசையில் வசித்துவந்த 90 ஏழைகளுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதே நேரம் தனது மகளின் திருமணத்திற்கு அவர் 70 முதல் 80 லட்சம் வரை மட்டுமே செலவு செய்திருக்கிறார். இதுகுறித்து அவரது மகள் ஸ்ரேயா கூறும்போது இதனை எனது தந்தை கொடுத்த மிகப்பெரிய திருமண பரிசாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு தந்தையாக தனது மகளுக்கு முனோத் கொடுத்த இந்த திருமண பரிசு உண்மையிலேயே விலையுயர்ந்தது தான்.......

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.