Mohamed Farook Mohamed Farook Author
Title: வெற்றிகரமாக 4 வது ஆண்டுக்குள் நுழையும் உங்கள் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
                     அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறோம் … அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் வலை...
                   அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறோம் …

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).....

நமது வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் வலைத்தளம் துவங்கி நேற்றுடன் 3 ஆண்டுகள் நிறைவுபெற்று. இன்று வெற்றிகரமாக 4 வது ஆண்டுக்குள் நுழையும் உங்கள் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் .இன் - அல்ஹம்துலில்லாஹ்!!!

கடந்த 2013 ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி நமது தளம் வி.களத்தூர் பார்வை என்ற பெயரில முதல் அடியெடுத்து வைத்தது. அதன் பிறகு கடந்த (02/02/2015) அன்று முதல் வி.களத்தூர் எக்ஸ்பிரஸ்.இன் என்ற புதிய முகவரியில் நமது தளம் இயங்க ஆரம்பித்தது. தங்கள் அறிந்ததே..

வி.களத்தூர் அளவில் ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான வலுவான ஒரு ஊடகத்தை அளிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எந்தவொரு லாப நோக்கமும் இன்றி வி.களத்தூர் மக்களுக்கு இந்த வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் என்னும் ஊடகம் மூலம் முழுக்க முழுக்க இளைஞர்களாக சேவையாற்றி வருகிறோம்.

வி.களத்தூரில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் செய்திகளாக உடனுக்குடன் எந்தவித பாரபட்சமும் இன்றி அமைதிக்கு குந்தகம் விளைவிக்காமல் அளித்து உண்மை தண்மை மாறாமல் தந்துக்கொண்டிருக்கிறோம்.
  
இளைஞர்களை செய்தியாளர்களாக கொண்டு இந்த இணையதளம் நடத்தப்படுகிறது.

கடந்த 3 வருடங்களில் மொத்தம் (8178) செய்திகளை பதிந்துள்ளோம். வெறும் செய்திகளை மட்டும் தராமல் நமதூர் நிகழ்வுகள், மாவட்ட, மாநில, தேசிய, உலக அளவிலான நிகழ்வுகள், வளைகுடா நாட்டில் வாழும் வி.களத்தூர் மக்களின் நிகழ்வுகள், மருத்துவ குறிப்புகள், இல்லறம், இஸ்லாம், எக்ஸ்பிரஸ் தொடர், எச்சரிக்கை, கட்டுரை, கல்வி, சமுதாய செய்திகள், அறிவுரைகள், வி.களத்தூர் புகார்கள், தகவல், தமிழகம், துபாய், தொழில்நுட்பம், நபிகள் நாயகம், பயனுள்ள இணையத்தளம், ரமலான், லப்பைக்குடிக்காடு, வபாத்துச் செய்தி, வளைகுடா, வேலை வாய்ப்பு, ஹஜ், பொதுமக்களுக்கு தேவையான அரசு சார்ந்த அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள், போன்ற பல்சுவை தகவல்களை உடனுக்குடன் தந்து சென்ற ஆண்டுகளை விட இந்த வருடம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பைப் இந்த தளம் பெற்றுள்ளது. இதனால் சில தினங்களுக்கு முன் (51லட்சம்) பார்வையாளர்களை தாண்டி சென்றது.

இந்த நாளில் இத்தளத்தை 4ஆம் ஆண்டிற்கு முன்னேறச் செய்த இறைவனுக்கும், வாசகர்களுக்கும் அமீரக மற்றும் வளைகுடா நாட்டில் வகிக்கும் நமது ஊர் மக்களுக்கும், வெளியூர், உலகம் எங்கும் வகிக்கும் வாசகர்களுக்கு செய்திகளை E-MAIL மூலமாகவும் ,WHATSAPP, FACEBOOK மூலமாகவும் அனுப்பிய நண்பர்களுக்கும், நமது வலைத்தளத்தின் தவறுகளை சுட்டி காட்டிய நண்பர்களுக்கும், நமது வலைத்தளத்தை இணைப்பு வைத்த நமது ஊர் சகோதர வலைத்தளத்திற்கும், வெளியூர் சகோதர வலைத்தளத்திற்கும் நமது வலைத்தளத்தின் செய்திகளை Facebook ,Google+ , whatsapp, TWITTER வழியாக Share செய்யும் நண்பர்களுக்கும், எமது மனமார்ந்த நன்றினை தெரிவித்துக்கொள்கிறேன்...

மேலும் எமது இணையத்தின் ஆசிரியர்கள், செய்தியாளர்கள் ஆகியோரால் எமது இணையதளம் சிறப்பாக செயல்படுகிறது என்பதால் நிறுவனர், ஆசிரியர் என்ற வகையில் அவர்களுக்கும் எனது மனமார்ந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தளம் தனிப்பட்ட யார் மனதையும் புன்படுத்தமால் செய்தி வெளியிட்டு வருகிறது. நாங்கள் வெளியிடும் செய்திகளில் யார் மனதாவது புன்படுத்தி இருந்தால் மன்னிக்க வேண்டுகிறோம்.

மேலும் எமது வலைத்தளத்தை இது போல் மென்மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள்  செயல்பட உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்…...

அன்புடன்- ஆசிரியர் & வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் டீம்
ஆக்கம் -  வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் நிறுவனர், M.முஹம்மது பாரூக். BCA.

ஆசிரியர்கள் விபரங்கள் -
மு. முஹம்மது பாரூக்.
R. நஜூர்தீன்.
A. சல்மான் ரசூல்.

செய்தியாளர்கள் விபரங்கள் -
A. மசூது அலிகான்.
S. சம்சுதீன்.
F. சையது இர்பான்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

  1. வாழ்த்துக்கள்.
    வி.களத்தூர்.இன் சார்பில் என் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறேன்.உங்கள் வலைத்தளம் மேலும் சிறப்பாக செயல் பட வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு வி.களத்தூர்.இன்.டீம்

    பதிலளிநீக்கு

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top