"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/12/16

அதன் தொடர்ச்சி உதிரப்போக்கு :
மாதவிடாய் நாட்கள் அல்லாத மற்ற நாட்களில் பெண்களுக்கு வெளியாகும் உதிரப்போக்கை சாதாரன மான இரத்தம் என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். மாதவிடாய் இரத்தமும், இந்த இரத்தமும் ஒன்றுபோல் காணப்படுவதால் இரண்டயையும் பிரித்து அறியும் விஷயத்தில் சில சிரமங்கள் உள்ளன.
உதிரப்போக்கு தொடர்ச்சியாக இருந்தால் மாத விடாய் இரத்தம் எது, சாதாரனமான இரத்தம் எது, எந்த இரத்தம் வருவதால் தொழுகையை விட வேண்டும் என்பதையெல்லாம் தெரிவது கடமையாகும். பெண் களுக்கு உதிரப்போக்கு மூன்று நிலைகளில் உள்ளது.

1. ஒரு பெண்ணுக்கு தொடர் உதிரப்போக்கு ஏற்படுவ தற்கு முன்பு ஏற்கனவே மாதத்தின் ஆரம்பத்திலோ, நடுவிலோ அல்லது கடைசியிலோ, ஐந்து, எட்டு, அல்லது குறிப்பிட்ட சில நாட்கள் மாதவிடாய் ஏற்படும் வழக்கமுள்ளவளாக இருப்பாள். இந்நாட்கள் தான் அவளுடைய மாதவிடாய் நாட்கள் என்பதை அறிந்து கொள்வாள். அந்நாட்களில் அவள் தொழுகை மற்றும் நோன்பை விட்டுவிட வேண்டும். குறிப்பிட்ட நாட்கள் முடிந்ததும் அவள் குளித்துத் தூய்மையாகி தொழுகை யைத் தொடரவேண்டும். அதற்குமேல் தொடரும் உதிரப்போக்கை சாதாரனமான இரத்தம் எனக் கருதவேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம், ''உன்னுடைய மாதவிடாய் நாட்களின் அளவு நீ தொழாமல் இருந்துகொள்! அதன் பின்னர் குளித்துத் தூய்மையாகி தொழுகையைத் தொடர்ந்து கொள்!'' என்று கூறினார்கள். (நூற்கள்: புகாரி, முஸ்லிம்)

2. ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாதவிடாய் இத்தனை நாட்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தெரியாது இருக்கும்போது, இரத்தத்தின் நிறம், வாடை ஆகியவற்றை வைத்து உதிரப்போக்கு எது என்பதை தெரிந்து கொள்ளலாம். அது கருப்பு நிறமாகவோ, நாற்றமுடையதாகவோ இருக்குமானால் மாதவிடாய் இரத்தம் என கணிக்கப்படும். மாதவிடாய் இரத்ததைப் பொறுத்த வரையில் அது சிகப்பு நிறமாகவும் இருக்கும். இதை வைத்து ஒரு பெண் தனக்கு ஏற்பட்டுள்ளது மாதவிடாய் இரத்தம்தான் என்பதை அறிந்துகொண்டு அந்நாட்களில் தொழுகை, நோன்பை விட்டு விட வேண்டும். அவள் எதை மாதவிடாய் இரத்தம் எனத் தீர்மானிக்கிறாளோ அந்நாள் முடிந்ததும் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பை கடைபிடிக்க வேண்டும்.
இதற்கு ஆதாரம் ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸாகும்.

மாதவிடாய் அறியப்படும் விதத்தில் கறுப்புநிற முடையதாக இருந்தால் தொழுகையை விட்டுவிடு, வேறு நிறத்தில் இருந்தால் நீ உளு செய்து தொழுது கொள். (அபூ தாவூது, நஸயீ)

3. மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படும் என்ற வழக்கம் இல்லாத ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் மற்றும் உதிரப்போக்கை பிரித்தறிய முடியாத நிலை ஏற்படுமானால், ஒரு மாதத்தில் அதிகப்படியாக மாதவிடாய் ஏற்படும் நாட்களாக ஆறு அல்லது ஏழு நாட்களை மட்டும் கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அதுதான் அதிகமான பெண் களின் மாதவிடாய் நாட்களாகும்.
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''அது ஷைத்தானால் ஏற்படும் தீட்டாகும். நீ ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்! பின்னர் குளித்துக் கொள்! மாதத்தில் 24 அல்லது 23 நாட்கள் தொழுகை நோன்பு ஆகியவற்றை நிறைவேற்றிக்கொள்! அது உனக்கு போது மானதாகும். இவ்வாறே மற்ற பெண்களைப் போன்று நீ மாதவிடாய் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்!ம் என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, நஸயீ, திர்மதி, இப்னுமாஜா, அஹ்மது)

சுருங்கக் கூறினால், மாதவிடாய் இத்தனை நாட்கள் தான் என பழக்கப்பட்டவள் அந்நாட்களை மட்டுமே மாதவிடாய் நாட்களாக எடுத்துக் கொள்ளவேண்டும். இரண்டு இரத்ததையும் வேறுபடுத்தி அறியக்கூடியவள் அதன்படியே செயல்படவேண்டும். இந்த இரண்டு நிலையிலும் இல்லாத ஒருவள், ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்கள் என எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் தொடர் உதிரப்போக்குள்ள பெண்ணின் விஷயத்தில் வந்துள்ள மேற்கண்ட மூன்று நபிமொழிகளையும் பின்பற்றியவளாகக் கருதப்படுவாள்.

ஷைகுல்இஸ்லாம் இமாம் இப்னுதைமிய்யா கூறுகிறார். உதிரப்போக்குள்ள பெண்களுக்காக கூறப்பட்ட விஷயங்கள் ஆறு:
1. வழக்கம்: வழக்கமாகக் கடைபிடித்து வரும் ஒன்று உறுதியானதாகும். இங்கு மாதவிடாய் தான் அடிப் படையே தவிர மற்றவை அல்ல.

2. பிரித்தறிதல்: கருப்பான கட்டியான துர்நாற்றமுள்ள இரத்தம் மாதவிடாயாக இருக்க அதிக வாய்ப்புண்டு. ஏனெனில் சிகப்பு நிற மாதவிடாய் இரத்தத்தை பிரித்தறிய முடியும்.

3. அதிகமான பெண்களின் வழக்கத்தை கவனித்தல்: ஒரு தனிநபர் பொதுவாக அதிக மக்களின் வழக்கத்தைக் கடைபிடிப்பதுதான் அடிப்படை.
இந்த மூன்று அடிப்படைகளுக்கும் ஹதீஸ் ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டு மற்ற அடையாளங்களைக் குறிப்பிடுகிறார்.
''இது விஷயத்தில் ஹதீஸில் வந்துள்ள அடை யாளங்களை வைத்து கவனிப்பதுதான் சரியானதாகும், மற்றவற்றை விட்டுவிட வேண்டியதுதான் என 'நிஹாயா'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதிரப்போக்குடைய பெண் அவள் சுத்தமானவள் என்ற முடிவின் படி அவள் கடைபிடிக்க வேண்டியவை.
1. முன்பு குறிப்பிட்ட விளக்கத்தின் பிரகாரம் மாதவிடாய் முடிந்ததும் குளிப்பது அவள்மீது கடமையாகும்.

2. ஒவ்வொரு தொழுகையின் போதும் இரத்தம் வெளியாகி அசுத்தமாக உள்ள இடத்தை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். இரத்தம் வரும் துவாரத்தை பஞ்சு போன்ற பொருளால் அடைத்து அது விழுந்து விடாதபடி கட்டி வைக்கவேண்டும். பின்னர் தொழுகையின் நேரம் வந்ததும் உளூ செய்து தொழவேண்டும். 

உதிரப்போக்குடைய பெண் விஷயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''இப்படிப்பட்ட பெண் அவள் மாதவிடாய் என்று தீர்மானித்த நாட்களில் தொழுகையை விட்டு விடுவாள். பின்னர் குளித்து ஒவ்வொரு தொழுகைக்கும் உளூச் செய்து கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (நூற்கள்: அபூ தாவூது, இப்னுமாஜா)
உதிரப்போக்குடைய பெண்ணிடம், ''பஞ்சை அந்த இடத்தில் வைத்துக் கட்டிக்கொள்!'' என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இதற்கென்றே தற்போது மருத்துவமுறையில் செய்யப்பட்ட பாதுகாப்பான பஞ்சுகள் (யீயனள) கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிரசவ இரத்தம் :
பிரசவ இரத்தம் என்பது பிரசவத்தின் போதும், பிரசவம் முடிந்த பின்பும் கற்பப்பையிலிருந்து வெளியா கும் இரத்தமாகும். இந்த இரத்தம் கற்பக் காலத்தில் கற்பப்பையில் தேங்கியிருந்த இரத்தமாகும். பிரசவம் ஆம்விட்டால் இந்த இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகும்.
பிரசவத்திற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பாக வெளியாகும் பிரசவத்தின் அடையாள இரத்தமும் பிரசவ இரத்தமாகவே கருதப்படும். இது அதிகமாகவும் பிரசவம் நிகழும் போது தான் வெளியாகும்.

மனித தோற்றம் பெற்று குழந்தை வெளியாவது பிரசவம் எனப்படும். மனித தோற்றம் பெறுவதற்கு குறைந்தது 81 நாட்களோ, அதிகப்படியாக மூன்று மாதங்களோ ஆகும். இதற்கு முன்பாக (81 நாட்கள்) ஏதும் வெளியா னால் அதோடு இரத்தம் வந்தால் அந்த இரத்தத்தை உதிரப்போக்கு இரத்தமாகவே கருத வேண்டும். இது கெட்ட இரத்தம், இதற்காக தொழுகை, நோன்பைவிட வேண்டியதில்லை, சாதாரனமான உதிரப் போக்குடைய பெண்ணின் சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.
பிரசவத்திற்குப் பின்னர் வெளிப்படும் இரத்தம் அதிகப்படியாக நாற்பது நாட்கள் வரை நீடிக்கும்.

''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவத்தினால் உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் நாற்பது நாட்கள் தொழாமல் இருந்துவிடுவார்கள்'' என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)
நாற்பது நாட்களுக்கு முன் இரத்தம் நின்று தூய்மையாகிவிட்ட பெண் குளித்துத் தொழுகையைத் தொடர வேண்டும். பிரசவ இரத்தத்தின் குறைந்த நாட்கள் எத்தனை என்பதற்கு வரம்பு ஏதும் இல்லை.
நாற்பது நாட்கள் கழிந்த பின்பும் இரத்தம் நிற்காதி ருந்தால் அந்நாட்கள் அவளுடைய மாதவிடாய் நாட் களாக இருக்குமானால் அந்த இரத்தத்தை மாதவிடாய் இரத்தமாகக் கருதவேண்டும். மாதவிடாய் நாட்களாக இல்லாமலிருப்பின் அதை சாதாரனமான உதிரப்போக் காக எடுத்துக் கொள்ள வேண்டும். நாற்பது நாட்கள் கழிந்த பின்னர் தொழாமலும், நோன்பு நோற்காமலும் இருக்கக்கூடாது.

 பிரசவ உதிரப்போக்குடைய பெண்களுக்கான சட்டங்கள்
பிரசவ இரத்தம் வெளிப்படும் பெண்களுக்கு மாதவிடாய்ப் பெண்களுக்குள்ள சட்டங்கள்தான்.
1. பிரசவ இரத்தம் வெளியாகும்போது அவளுடன் அவளுடைய கணவன் உடலுறவு கொள்வது கூடாது. உடலுறவைத் தவிர மற்ற இன்பங்களை அனுபவிப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
2. பிரசவ இரத்தம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் பெண் தொழுவது, நோன்பு நோற்பது, கஅபாவை வலம் வருவது கூடாது.
3. பிரசவ இரத்தின்போது விடுபட்டுப்போன நோன்பு களை மற்றநாட்களில் நோற்கவேண்டும். பிரசவ இரத்தம் வெளியாகும் பெண்கள் குர்ஆனை தொடு வதும் அதை ஓதுவதும் கூடாது, குர்ஆன் மறந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டாலே ஒழிய
4. மாதவிடாய் இரத்தம் நின்ற பெண் குளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே பிரசவ இரத்தம் நின்றதும் குளிப்பது பெண்கள் மீது கடமையாகும்.

இதற்கான ஆதாரங்கள்:
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் பிரசவமான பெண் நாற்பது நாட்களுக்கு தொழாமலிருந்து விடுவாள்கி என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூற்கள்: அஹ்மது, அபூ தாவூது, நஸயி, இப்னுமாஜா, திர்மிதி)

இமாமுல்மஜ்த் இப்னு தைமிய்யா முன்தகா எனும் தம் நூலில் 1ழூ ழூ184 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார்.
இந்த ஹதீஸின் பொருள் பிரசவ உதிரப்போக்கு ஏற்பட்டிருக்கும் பெண் நாற்பது நாட்கள் தொழாமல் இருக்குமாறு கட்டளையிடப்பட்டிருக்கிறாள். நபி(ஸல்) அவர்களின் மனைவி அறிவிக்கும் செய்தி முரண்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மாதவிடாய், பிரசவ உதிரப்போக்கு விஷயத்தில் ஒரு காலத்திலுள்ள பெண் களின் பழக்கம் ஒன்று பட்டிருக்க முடியாது என்றே கூறவேண்டும்.

''நபி(ஸல்) அவர்களுடைய மனைவியரில் ஒருவர் பிரசவத்தின்போது நாற்பது நாட்கள் (காத்து) இருப்பார் கள். அந்நாட்களின் விடுபட்டுப்போன தொழுகையைத் தொழுது கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் அப்பெண் களுக்குக் கட்டளையிட மாட்டார்கள்'' என உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார். (நூல்: அபூ தாவூது)

குறிப்பு: ஒரு பெண்ணிற்கு பிரசவ உதிரப்போக்கு நாற்பது நாட்களுக்கு முன்பே நின்றுவிடுமானால் அவள் குளித்துவிட்டு தொழுகை மற்றும் நோன்பு போன்ற கடமைகளை நிறைவேற்றிய பின் நாற்பது நாட்கள் முடிவதற்குள் திரும்பவும் உதிரப் போக்கு ஏற்படுமானால் அது பிரசவத்தினால் ஏற்படும் உதிரப்போக்காகவே கருதப்படும். உதிரப்போக்கு நின்றிருந்த நாட்களில் தொழுத தொழுகை மற்றும் நோன்பு போன்றவை ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே கருதப்படும். செய்து முடித்து விட்ட அக்கடமைகளை மீண்டும் செய்ய வேண்டிய தில்லை.

பார்க்க: ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீமின் ஃபத்வாத் தொகுப்பு 2ழூ ழூ102.
ஷேக் அப்துல்லாஹ் இப்னு பாஸ் அவர்களின் பத்வாத் தொகுப்பான அஸ்ஸாது என்ற நூலின் விளக்கவுரை பக்கம்: 1ழூ ழூ405
பெண்களுக்கான இயற்கை உதிரப்போக்கு பக்கம்: 55,56
ஃபதாவா ஸஅதிய்யா பக்கம்: 137
ஷேக் அப்துர் ரஹ்மான் பின் சஅதி கூறுகிறார்கள்: மேற்கூறப்பட்ட விஷயங்களிலிருந்து பின்வரும் அடிப் படைகள் புலனாகின்றன, பிரசவத் தீட்டிற்கான காரணம் பிள்ளைபேறு ஆகும். தொடர் உதிரப்போக்கு என்பது நோயினால் ஏற்படுவதாகும். மாதவிடாய் இரத்தம்தான் ஒரு பெண்ணிற்கு அடிப்படையாக வரும் இரத்தம், அல்லாஹ்வே மிக அறிந்தவன். (நூல்: இர்ஷாத் உலுல் அப்ஸார் வல்அல்பாப்1 பக்கம்:24)

மாதவிடாய் நிற்க மருந்து உண்ணுதல்:
ஒருபெண் தன்னுடைய ஆரோக்கியம் பாதிப்பிற் குள்ளாகமல் இருக்கும் வரை அவள் மருந்து உண்ணுவதில் தவறு இல்லை. மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் மாதவிடாய் இரத்தம் நின்றிருக்கும் நாட்களில் தொழுகை மற்றும் நோன்பு போன்ற வணக்கங்களை அவள் நிறைவு செய்யவேண்டும். சுத்தமான மற்ற பெண்களுக்கான சட்டம்தான் இவளுக்கும் பொருந்தும்.

கருக்கலைப்பு :
இஸ்லாமிய பெண்மணியே! உன்னுடைய கருவறை யில் அல்லாஹ் படைத்ததை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு உனக்கு உள்ளது அதை நீ மறைப்பது கூடாது.
''அல்லாஹ்வையும், இறுதிநாளையும் அந்தப் பெண் கள் நம்புவார்களாயின் தங்கள் கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது.'' (அல்குர்ஆன் 2:228)

எந்த நிலையிலும் கருக்கலைப்புச் செய்வதற்கு சூழ்ச்சி செய்யாதே! கர்ப்பமான நிலையில் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது உனக்கு கடினமானதாக இருக்கு மானால் அல்லது கருவுக்கு கேடு ஏற்படுமானால் அம்மாதத்தில் நோன்பை விடுவதற்கு அல்லாஹ உனக்கு சலுகை வழங்கியுள்ளான். இக்காலத்தில் பரவியுள்ள கருக்கலைப்பு மற்றும் அறுவைச் சிம்ச்சைகள் தடுக்கப் பட்டதாகும். கருவறையில் உள்ளதற்கு உயிர் ஊதப் பட்டப்பின்னர் கருக்கலைப்பால் கருவான அக்குழந்ததை இறந்துவிடுமானால் நியாயமான காரணமின்றி உயிரைக் கொலைசெய்த குற்றத்திற்கு அப்பெண் ஆளாம் விடுகின்றாள். 

இதன் மூலம் குற்றவியல் சட்டத்தில் என்ன தண்டனை உள்ளதோ அதைப் பெற்றுக் கொள்வதற்கு அவள் தகுதியாகிவிடுகிறாள். இதன் பரிகாரமாக இறை நம்பிக்கையுள்ள ஓர் அடிமையை அவள் உரிமை விட வேண்டும். அதற்கு சக்தி பெற வில்லையெனில் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். என இமாம்கள் சிலர் கூறியுள்ளனர். இச்செயல் உயிருடன் புதைப்பதற்குச் சமம் என அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.

கருவறையில் உள்ள குழந்தை இறந்துவிட்டது என்று தெரியாத வரை அதைக் கலைப்பது கூடாது என ஷேக் முஹம்மத் இப்ராஹீம் தம் ஃபத்வாத் தொகுப்பில் 11ழூ ழூ151 ல் குறிப்பிட்டுள்ளார்.
சவூதியில் உள்ள மார்க்க அறிஞர்களின் சபை 20.06.1407 ஹிஜ்ரியில் வெளியிட்டுள்ள தன் தீர்மானம் 140ல் பின்வருமாறு கூறியுள்ளது.
1. இஸ்லாம் கூறக்கூடிய மிக நெருக்கடியான எந்தவித மான காரணமும் இல்லாதபோது கருக்கலைப்புச் செய்வது கூடாது.

2. முதல் ஆரம்ப நாற்பது நாட்களில் குழந்தை வளர்ப்பு சிரமம் என்பதற்காகவோ அல்லது அவர்களை வளர்ப் பதும் அவர்களுக்கு கல்விபோதிப்பதும் முடியாது என்ற பயத்தின் காரணத்திற்காகவோ, அல்லது அவர் களின் எதிர்காலத்தைப் பயந்தோ அல்லது தங்களிடமுள்ள குழந்தைகள் போதும் என்று கருதியோ கருக்கலைப்பு செய்வதுகூடாது.

3. கருவறையில் உள்ளது சதைக்கட்டியாக இருக்கும் நிலையில் அது கருவில் இருப்பதால் தாயின் உயிருக்கு ஆபத்துநேர்ந்துவிடும் என உறுதியான மருத்துவ சான்று இல்லாதவரை கருக்கலைப்பு செய்வது கூடாது. எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொண்டு கடைசியாகத்தான் இந்தமுடிவிற்கு வரவேண்டும்.
4. கற்பத்தின் மூன்றாவது நிலையான நான்கு மாதகாலம் ப+ர்த்தியான பின்பு ஏதோ காரணங்களினால் குழந்தை தாயின் கற்பத்தில் இருப்பது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்திவிடும் என்று மருத்துவர்குழு உறுதிசெய்யாத வரை கருவைக் கலைப்பது கூடாது. கற்பத்திலுள்ள குழந்தையைக் காப்பாற்றுவதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டபிறகே இந்த முடிவிற்கு வரவேண்டும். இந்த நிபந்தனைகளோடு கருவைக் கலைப்பதற்கு காரணம், இரண்டு விதமான தீங்குகளில் பெரியதீங்கை தடுத்து நிறுத்துவது கடமை என்ற அடிப்படையிலும், இரண்டு நலன்களில் சிறந்ததை தேர்வு செய்யவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் இது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உறுதியோடும் இறையச்சத்து டனும் செயல்படுமாறு இச்சபை கேட்டுக்கொள்கிறது.
''பெண்களுக்கான இயற்கை இரத்தம் என்ற பெயரில் உள்ள நூலில் ஷேக் முஹம்மத் இப்னு உஸைமீன் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: ''கருவறையில் உள்ளதை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உயிர் ஊதப்பட்ட பின்னர் கருக்கலைப்புச் செய்வது சந்தேகமின்றி தடை செய்யப்பட்டதாகும். நியாயமின்றி ஓர் உயிரைக் கொலை செய்ததாகக் கருதப்படும். குர்ஆன், ஹதீஸ் அடிப்படை யில் தடைசெய்யப்பட்டுள்ள உயிரை கொலைசெய்வது விலக்கப்பட்டதாகும். மேற்கூறப்பட்டதில் பக்கம் - 60

'அஹ்காமுன்னிஸா' என்ற நூலில் பக்கம் 108 ல் இப்னு ஜவ்ஸி குறிப்பிடுகிறார்: திருமணம் செய்வதன் நோக்கமே மகப்பேறுக்காகத்தான். எல்லா நீரிலிருந்தும் குழந்தை ஏற்பட்டுவிடாது. குழந்தை உருவாக்கப்பட்டு விட்டால் நோக்கம் நிறைவேறிவிடும். அதைக் கலைப்பது அடிப்படை நோக்கத்திற்கு மாற்றம் செய்வதாகும். கருவறையில் உயிர் ஊதப்படுவதற்கு முன்னால் கற்பத்தின் ஆரம்ப காலத்தில் கருக்கலைப்பு செய்வது பெரிய பாவமாகும். உயிர் ஊதப்பட்ட பின்னர் செய்யப்படும் கருக்கலைப்பை விட குறைந்த குற்றம்தான் இதற்கு. உயிர் ஊதப்பட்டதை கலைப்பது இறைநம்பிக்கையாளன் ஒருவனைக் கொலை செய்த குற்றத்திற்கு சமமானதாகும்.

''உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை, மறுமையில் வினவப்படும் எக்குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது என்று.'' (அல்குர்ஆன் 81:8,9)
இஸ்லாமியப் பெண்ணே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! எந்த நோக்கத்திற்காகவும் இந்த அக்கிரமத்தைச் செய்யத் துணியாதே வழிகெடுக்கும் விளம்பரங்களைக் கண்டு ஏமாறாதே! மார்க்கத்திற்கும், அறிவிற்கும் பொருந் தாத தவறான பழக்க வழக்கங்களைக் கண்டு ஏமாந்து விடாதே!

பிரிவு - 4  பெண்களின் ஆடைபற்றிய சட்டங்கள் இன்ஷா அல்லாஹ்! நாளை தொடரும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7  

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.