"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
19/12/16

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய மருத்துவ தொழிற்நுட்பமான 3D தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி கிட்னியில் வளர்ந்து வந்த கட்டியை (Tumour) அகற்றி சாதனை நிகழ்த்தினர் டாக்டர் யாஸிர் அல் சயீதி அவர்கள் தலைமையிலான துபை மருத்துவமனையின் (Dubai Hospitals) மருத்துவ குழுவினர்.

இந்த சதைக்கட்டியானது கிட்னியின் பின்பக்கத்தில் (Posterior part) இரத்த நாளங்கள் (Blood vessels) மற்றும் சிறுநீரகக் குழாயின் (Ureter) அருகிலும் மிக சிக்கலான முறையில் வளர்ந்திருந்தது. (Middle East & Nation of Africa) - MENA என சுருக்கமாக அழைக்கப்படும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பகுதியில் நடைபெற்ற முதல் 3டி அறுவை சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

3D அறுவை சிகிச்சை வெற்றியடைந்ததை தொடர்ந்து துபை சுகாதார துறையின் தலைவர் ஹூமைத் அல் கத்தாமி அவர்கள் குறிப்பிடும் போது, மக்களுக்கு பயன்தரும் எந்த நவீன யுக்தியையும் உள்வாங்கிக் கொள்ள தயங்க மாட்டோம் என்றும் இந்த அறுவை சிகிச்சைக்கான பயிற்சிகள் பிற மருத்துவ நிபுணர்களுக்கும் வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.