"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
12/12/16

வர்தா புயல் காரணமாக சென்னையில் இன்று காலை முதல் மாலை வீசிய பலத்த காற்றின் காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முதல் சென்னையை மிரட்டிக்கொண்டிருந்தா வர்தா புயல் சென்னை அருகே இன்று மாலை கரையைக் கடந்தது.

இதனால் காலை முதலே சென்னையில் பலத்த காற்று வீச தொடங்கியது.
முதல் கட்டமாக இன்று காலை புயலின் மேற்கு பகுதி கரையைக் கடந்தது. அப்போது 100 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. போகப்போக காற்றின் வேகம் அதிகரித்தது.

3 லிருந்து 4 மணி வரை புயலின் மையப்பகுதி கரையைக் கடந்தது. அப்போது சற்று அமைதி நிலவியது.
இறுதியாக 4 மணி முதல் 7 மணி வரை புயலின் மூன்றாவது, அதாவது மையப்பகுதி கரையக் கடந்த போது 90 லிருந்து 100 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது.

பலத்த காற்றின் காரணமாக சென்னையில் ஏராளமான இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பிகள் சரிந்து கீழே விழுந்தன. மொத்தம் 3000 க்கும் மேற்பட்ட மரங்களும், 3 ஆயிரம் மின் கம்பங்களும் கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றையெல்லாம் சீரமைக்கு இன்னும் 2 அல்லது 3 நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.