"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
10/12/16

இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மக்காவையும் மதீனாவையும் இணைக்கும் 'ஹரமைன்' அதிவேக ரெயில் சேவை 2018 மார்ச்சில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முஸ்லிம்களின் புனித நகரங்களான சவூதி அரேபியாவின் மக்காவையும் மதீனாவையும் இணைக்கும் ரெயில் சேவைக்கான பணிகள் 2017 இறுதியில் பூர்த்தியாகும் என்றும், 2018 மார்ச் மாதம் ரெயில் சேவை தொடங்கும் என்றும் பிரபல அரபு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

12 ஸ்பானிஷ் நிறுவனங்களும், இரண்டு சவூதி நிறுவனங்களும் இணைந்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் இதன் வேலைகளை செய்து வருகின்றன.

இதற்கான வேலைகள் இவ்வருடம் முடிவடையும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் வேலைகள் பூர்த்தியடையாததைத் தொடர்ந்து. வரும் 2018 மார்ச்சில் ரெயில் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 450 கிலோ மீட்டர் தூரம் செயல்படவுள்ள இச்சேவைக்கு சுமார் 35 ரெயில்கள் பயன்படுத்தப்படவுள்ளன.

மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையே உள்ள வழிகளில் மக்கா, ஜித்தா, சுலைமானியா, ஜித்தா விமான நிலையம் மற்றும் ராபிக் ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன.

இதில் ராபிக் முதல் மதீனா வரை ரெயில்வே பாலங்கள் அமைக்கும் வேலைகள் முடிவடைந்துள்ளன. இனி மக்கா - ஜித்தா இடையேயான வேலைகள் மீதமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.